ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : தனுசு

தர்மத்துக்குத் தலை வணங்காத தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் நல்லபல அனுபவங்களைத் தரப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் தெளிவு பெறுவீர்கள்.

உங்களின் அறிவாற்றலை மழுங்கவைத்த ராகு இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப்போகிறார். வீண் விவாதங்கள், மன உளைச்சல், டென்ஷன், காரியத்தடைகள் எனப் பலவிதங்களில் சிக்கிக் கொண்டிருந்த நீங்கள், இனி உற்சாகத்துடன் வலம்வருவீர்கள்.

குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சின்னச் சின்ன விவாதங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப் பெரிது படுத்தாதீர்கள். மனைவிக்குக் கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து போகும்.

உங்களின் தீய பழக்கவழக்கங்களை சுட்டிக் காட்டுவார். அவற்றையெல்லாம் திருத்திக் கொள்ளப் பாருங்கள். அவர்வழி உறவினர்களால் கருத்து மோதல், பகைமை வந்து போகும்.

எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றிச் சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். அழகும் அறிவும் மிகுந்த குழந்தை பிறக்கும். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள், உயர்கல்வி யில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள்.

வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந் தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங் களிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் படிவங்களில் கையெழுத் திடாதீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். அரசியல்வாதிகள் சிற்சில தடைகளைச் சந்தித்தாலும் ஏற்றம் காண்பார்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.

எவ்வித காரணத்துக்காகவும், வேலையாள் களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். சில வேலைகளை நீங்களே முன்னின்று நடத்துவது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிக்கும்போது கனிவு தேவை; கண்டிப்பு வேண்டாம்.

உத்தியோகத்தில், எதற்கெடுத்தாலும் உங்களை குறைசொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி நேசக்கரம் நீட்டுவார். அவரால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பதவி-சம்பள உயர்வுகளும் உண்டு. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.

கலைத்துறையினர் போட்டி, பொறாமை களுக்கு நடுவில் வெற்றி பெறுவார்கள். அவர் களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்துப் பல பிரச்னைகளில் சிக்க வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமர்கிறார்.

இனி, சூழலுக்கு ஏற்றார்போன்று  பேச வைப்பார். எப்போதும் ஒருவித தடுமாற்றத் திலேயே இருந்த நீங்கள் இனி தன்னம்பிக்கை யுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருந்ததே, இனி அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி, அவர்களின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து போகும். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை மற்றும் படிப்பு விஷயத்துக்காக அதிகம் போராட வேண்டியது வரும்.

ராசிக்குள் கேது அமர்வதால் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்; பருகு பானங்களிலும் கவனம் தேவை. தினமும் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது. வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். பழைய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரர் களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம், கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக்காது. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் காரசார மான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசு வரிகளை முறை யாகச் செலுத்திவிடுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி புது அனுபவங்களையும் அதன் மூலம் முன்னேற் றத்தையும் தருவதாக அமையும். ராம நாம பாராயணமும் ஸ்ரீராம வழிபாடும் நன்மைகளை அளிக்கும்.

%d bloggers like this: