ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மகரம்

திலும் திடமான முடிவெடுக்கும் மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டங்களையும் திடீர் திருப்பங் களையும் வழங்கப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு, எதிலும் ஈடுபாடு இல்லாமல் உங்களை எந்த ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிவைத்திருந்தார் ராகு. தாழ்வு மனப்பான்மையையும், மன உளைச்சலையும், வீண் கவலைகளையும் தந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்து அமர்கிறார்.

ஆகவே, இனி எதிலும் எல்லாவற்றிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்றுசேர்வீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி நிம்மதியும் அமையும் பிறக்கும். ஒருநாள்கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லையே என்று நினைத்துப் புழுங்கினீர்களே! கவலை வேண்டாம். இனி, குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். மனைவி பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்கள், உங்கள் பேச்சுக்கு மதிப்புக்கொடுப்பார்கள். மனைவி அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டாரே, இனி அவரின் ஆரோக்கியம் கூடும்.

மறுமணத்துக்கு முயற்சி செய்தவர்களுக்குத் திருமணம் உடனே கூடி வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். கடன் பிரச்னை களில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றிவிட்டு புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

தந்தைவழி சொந்தங்களிடையே மனஸ்தாபம் வெடித்ததே! அந்த நிலை இனி மாறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். உங்களைப் பற்றித் தவறாக நினைத்தவர்களின் மனம் மாறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.  பிள்ளைகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு, கோபம் எல்லாம் நீங்கும். இனி உங்களின் அன்புக்கு கட்டுப்படுவார்கள்.

வேலை தேடி அலைந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டுக் கொண்டிருந்ததே… இனி தடைகள் நீங்கி, நல்ல இடத்திலிருந்து வரன் அமையும். கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு மறதி, மந்தம் விலகும். தடைப்பட்டக் கல்வியை மீண்டும் தொடருவீர்கள். நல்லவேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். அரசியலில் தடைகள் நீங்கும்; வெற்றிப்பாதை புலப்படும்.

வியாபாரத்தில், மற்றவர்களின் ஆலோசனை யால் நீங்கள் இழந்தது கொஞ்சநஞ்சமில்லை. இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். புது அணுகுமுறையால், விளம்பர யுக்தியால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மருந்து வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புப் பாராட்டுவர். உங்களின் யோசனைகளும், திட்டமிடலும் பாராட்டு பெறும். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்; விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்.

கலைத்துறையினருக்கு, இதுவரை இருந்துவந்த வீண் கிசுகிசுத்  தொல்லைகள், வதந்திகள் ஆகியவை மறையும். வரவேண்டிய சம்பளப் பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங் கள் அழைத்துப் பேசும்; அவற்றால் ஆதாயம் உண்டு.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து உடல் சோர்வு, காரியத்தடைகள், மன உளைச்சல், விரக்தி, சோம்பல் என அடுக்கடுக்காக பிரச்னைகளைக் கொடுத்து வந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார்.

உங்கள் பேச்சில் இனி தெளிவு பிறக்கும். மருந்து, மாத்திரையுடன் குடித்தனம் நடத்தினீர் களே! இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடிக் கோபப்பட்டு வீண் வம்பில் சிக்கிக் கொண்டீர்களே, இனி சாந்தமாகப் பேசும் அளவுக்குப் பக்குவப்படுவீர்கள்.

கல்யாணம் காட்சியில் கலந்து கொள்ளா மலும் எதிலும் பிடிப்பில்லாமலும் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும்.

சகோதர – சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். போதிய உறக்கம் இல்லாமல் தவித்த நீங்கள் இனி ஆழ்ந்து உறங்குவீர்கள். உடலில் சேர்ந்த கெட்ட நீரெல்லாம் வடிந்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வியாபாரத்தில், பற்றுவரவு உயரும். வேலையாள்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப் படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. வெகுநாள்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இனி தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கித் தருவதாக அமையும். மாலவனை மனதால் பிரார்த்தித்துத் தொழ, வாழ்க்கை மலரும். சனிக் கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி அணிவித்து வழிபட்டு வாருங்கள்; வெற்றிகள் குவியும்.

%d bloggers like this: