Advertisements

ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 : மேஷம்

முற்போக்கு சிந்தனை கொண்ட மேஷ ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும்; பெண்களின் எண்ணம் பூர்த்தியாகும்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

உங்களைப் பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் மனஸ்தாபத்தையும் ஏற்படுத்திய நிலை மாறும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சோம்பல், அலட்சியம் ஆகியவை நீங்கி உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

 

சவாலான விஷயங்களையும் சர்வ சாதாரண மாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டில் இதுவரை ஏற்பட்ட டென்ஷன், மன உளைச்சல் ஆகியவை நீங்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

கணவன்-மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்தி, கலகம் விளைவித்த நபர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள். அதேபோல், நீங்கள் வாங்கிய கடன்களையும் தந்து, கம்பீரமாக வலம் வருவீர்கள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் வியப்பார்கள்.

பிள்ளைகளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களை மேற்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். கல்யாணம் தடைப்பட்டுக் கொண் டிருந்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். மகளின் திருமணத்தை விமர்சை யாக நடத்தி முடிப்பீர்கள். திருமணம் ஆகி, குழந்தை பாக்கியம்  இல்லாமல் கஷ்டப்பட்ட வர்களுக்கு, இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பி-கள், கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். இளைய சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

தாய்வழி உறவினர் மத்தியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாள்களாக மனதுக்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அவர்களுக்குப் பெற்றோரின் ஆதரவு உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். உடல் ஆரோக் கியம் மேம்படும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நஷ்டங்களை இனி ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். போட்டியா ளர்களே திகைக்கும் அளவுக்குப் புது யுக்தி களைக் கையாளுவீர்கள். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். ஷேர் மூலம் ஆதாயம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில், அலட்சியப்படுத்திய மேலதிகாரி, இனி உங்களுக்கு இணக்கமாக இருந்து, ஆதரவு தருவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.

கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை, உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்தப் பணிகளையும் செய்யவிடாமல், தடுமாற்றத்தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேதுபகவான், இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்கிறார்.

ஆகவே, சமயோசித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். வாழ்க்கைத்துணையின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பணப்பற்றாக்குறை நீங்கும். வருங்காலத்துக் காகச் சேமிக்கவும் செய்வீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு.

உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. அவருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்லுங்கள். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவு களும் ஏற்படும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமை யைப் புரிந்துகொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு மிக நன்றாக இருக்கும். உத்தியோகத்தில், தேங்கிக்கிடக்கும்  பணிகளை விரைந்து முடிக்கவேண்டியது அவசியம். பணி சார்ந்து நிலுவையில் இருக்கும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சலுகைகளுடன் கூடிய நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒரு தீர்வு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல தீர்வை தருவதாகவும், உங் களைச் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கலும் செவ்வரளி மாலையும் சமர்ப்பித்து வழிபடுங்கள்; சகலமும் நன்மையாகவே அமையும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: