Advertisements

ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மிதுனம்

 

லகலப்பான பேச்சும் துடிப்பும் மிகுந்த மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த ராகு, கேது சஞ்சாரம் 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் மாறுபட்ட பலன்களை அருளப் போகிறார்கள். தெய்வப்பலம் கைகூடும்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்துகொண்டு மனப் போராட்டங் களையும், வீண் அலைச்சலையும், காரியத் தடைகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஆகவே, உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். உங்களை சிலர் அவமதித்து பேசினாலும் அதற்குத் தக்கபதிலடி தருவீர்கள்.

குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங் காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். படிப்பின் மீது இருந்த அலட்சியம் மாறும். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அவரின் கல்யாணத்தை உறவினர்கள், நண்பர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள்.

பண வரவு அதிகரிக்கும் என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் வரும். வீண் கெளரவத்துக்காகப் பணத்தை வாரி இறைக்காதீர்கள். தலைச்சுற்றல், முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்கவேண்டாம்.  உடன்பிறந்தவர்கள் இனி தேடி வந்து உதவுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை கவனமாகக் கையாளுங்கள். பங்காளிப் பிரச்னைகள் தலைதூக்கலாம்.

உறவினர்களில் சிலர், உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். வீண் பகை, மனக் கசப்புகள் வரும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

கன்னிப்பெண்களே! மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள். பெற்றோரின் பேச்சிக்குச் செவிசாயுங்கள். தடைபட்ட கல்யா ணம் கூடி வரும். இசை, நடனத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தலைமையை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. உட்கட்சி பூசலில் தலையிடவேண்டாம்.

வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்கிறார்கள் என நம்பி, எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அதேபோல், பெரிய முதலீடுகளையும்  இந்த காலகட்டத்தில் தவிர்க்கவும். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டி யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங் கள். வேலையாள்கள் அடிக்கடி விடுப்பில் சென்று உங்களை டென்ஷாக்குவார்கள். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல், நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கெடுபிடி காட்டினாலும் அவர்களுடன் சச்சரவில் ஈடுபட வேண்டாம். அவர்களை விட்டுப்பிடிக்கவும். புது ஆர்டர்கள், ஏஜென்சிகள் எடுப்பதில் தடையும் தாமதமும் ஏற்படும். எனினும் அவற்றைப் போராடி பெறுவீர்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை, உடனுக்குடன் செலுத்திவிடுவது நல்லது. அந்த விஷயத்தில் தாமதம் வேண்டாம்.

உத்தியோகத்தில், உங்களின் திறமையை அனைவரும் உணர்வார்கள். தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் இனி தாமதமின்றி கிடைக்கும். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பரிசு, பாராட்டுகள் குவியும்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்துகொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைக் குறை கூறியவர்கள் இனி புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரியின் திருமணத்தைல் கோலாகலமாக நடத்துவீர்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். எனினும், ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். அந்தரங்க விஷயங்களை யாரிட மும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்லவேண்டாம். நன்றி மறந்த வர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப் படுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.குலதெய்வத்துக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாள்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தி யோகத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைக்கவேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் நேர்ப்பாதையில் செல்வது நல்லது.

மொத்தத்தில் இந்த ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதார்த்தமான முடிவுகளால் முன்னேற வைப்ப தாக அமையும்.

உங்களுக்குப் பெருமாள் வழிபாடு துணை சேர்க்கும். எதிர்காலம் சிறக்க, திருவோண விரதம் இருந்து பலன் பெறுங்கள்.

Advertisements
%d bloggers like this: