Advertisements

ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கடகம்

தையும் துல்லியமாகச் செய்துமுடிக்கும் கடகராசி அன்பர்களே!  13.2.19 முதல் 31.8.20 வரையிலான காலகட்டத்தில், ராகு-கேது சஞ்சாரம், பல நல்ல தீர்வுகளை உங்களுக்கு அளிக்கப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு திக்கு திசையறியாது திண்டாடவைத்ததுடன், காரணகாரியமே இல்லாமல் பிரச்னைகளில் சிக்கவைத்த ராகு, இப்போது ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.

ஆகவே, நிம்மதி பிறக்கும். அடிக்கடி தலை வலி, முதுகுவலி, கால் வலி என முடங்கிய நீங்கள், இனி நோயிலிருந்து விடுபட்டு முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியம் கூடும்.  எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். இனி நிம்மதியாக உறக்கம் வரும்.

மற்றவர்களுக்கு உதவப் போய் நீங்கள் பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே! அந்த நிலை இனி மெள்ள மெள்ள மாறும். குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் விலகி, சந்தோஷம் குடிகொள்ளும்.

சந்தேகத்தாலும், வாக்குவாதத்தாலும் பிரிந் திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், கிரகப் பிரவேசம் என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். தூரத்து உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.

தாயாருக்கு இருந்து வந்த மூட்டுவலி விலகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.  பிள்ளை களிடம் பாசமாக நடந்துகொள்வீர்கள். அவர் களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய் வீர்கள்.

உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உடன்பிறந்தோர் இனி ஒத்தாசை யாக நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் ஆகியவை சார்ந்த கெளரவ பதவிகள் தேடி வரும்.

கன்னிப்பெண்களுக்கு உடல்நலன் சீராகும். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். சகலத்திலும் மனம் ஈடுபாடு கொள்ளும். தூக்கமின்மை நீங்கும். கல்யாணம் நடக்கும். அரசியல்வாதிகள் தன் பலத்தை நிரூபித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள். உங்களில் சிலர், வாகனத்தை மாற்றுவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் உங் களின் தகுதி உயரும்.

வியாபாரத்தைத் தொடர முடியாமல் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளானீர்களே… இனி, புது முதலீடுகள் செய்ய பணம் வரும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். சிலர், வேலையாள்களை மாற்றிவிட்டு புதிய பணியாளர்களை அமர்த்துவீர்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி வகையால் அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் நெடுங்காலமாக நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்போது கிடைக்கும். இதுவரையிலும் உங்களுக்கு இடைஞ்சல்கள் விளைவித்துவந்த சக ஊழியர்கள் இனி நட்புக்கரம் நீட்டுவார்கள்.

கணினித் துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; அதன்மூலம் ஒளிமயமான எதிர்காலம் வாய்க்கும்.

கலைஞர்களுக்குக் கவலைகள் நீங்கும். இனி கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைச் சுறுசுறுப்புடன் செயலாற்றவைக்கும். அத்துடன், பெரும்புகழையும் பொருளாதார உயர்வையும் அளிப்பதாக அமையும். ஆகவே, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஏகப்பட்ட வாக்குவாதங்களையும், சண்டை சச்சரவுகளை யும், உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்து உங்களை வாட்டிவதைத்த கேது பகவான், இப்போது ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

ஆகவே, பிரச்னைகளின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். விலகிச் சென்றவர்கள், இனி வலிய வந்து பேசுவார்கள்.

எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும். புத்தி சாதுர்யத்துடன் பேசி, சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் பணம் தங்கும். பழைய கடனைப் பைசல் செய்யுமளவுக்கு வருமானம் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காகப் பதவியுயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி, உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்தி செல்வதாக அமையும்.

உங்களுக்குச் சிவ தரிசனமும் பிரதோஷ வழிபாடும் பலம் சேர்க்கும். பிரதோஷ தினத்தில் காப்பரிசி சமர்ப்பித்து, நந்தியெம்பெருமானை வழிபடுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

Advertisements
%d bloggers like this: