ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கன்னி

லகலப்பான பேச்சால் கவலையை மறக்கடிக்கும் கன்னி ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையில் புதுப்பயணத்தை வழங்கப் போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீடான லாப வீட்டில் அமர்ந்துகொண்டு பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறவைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு.

இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும்.

உங்களின் நல்ல மனசைப் புரிந்துகொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவாருங்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வீண் அலைச்சல்கள் நீங்கும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.

ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கன்னிப்பெண்களுக்குப் பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைபட்ட கல்வியைத் தொடரு வார்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். படபடப்பு, டென்ஷன் விலகும்.

அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித் துப் போவது நல்லது. அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பற்று-வரவை உயர்த்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வராமலிருந்த பாக்கிகளும் வசூலாகும். கடையை அழகுபடுத்தி அதிக வேலையாள்களைப் பணியில் அமர்த்து வீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.

ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க் கவும். தகுந்த அறிஞர்களிடம் ஆலோசனை செய்து, அவர்களின் அறிவுரைப்படி செயல் படுவதால் முன்னேற்றம் காணலாம். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் பழியும் வரக்கூடும். ஆகவே, எந்த விஷயத்திலும் கவனமாகப் பணியாற்றவும்.

சிலருக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கலாம். அதற்காக வருந்தவேண்டாம். புதிய அனுபவங் களைக் கற்றுக்கொள்வீர்கள். சிலருக்கு, மறை முக எதிர்ப்புகள் இருக்கும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

கணினித்துறையினருக்கு வேலை தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். எனினும் மனம் தளராமல் பணியாற்றுங்கள்; முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

கலைஞர்களின் திறமைக்குப் பரிசு, பாராட்டுகள் கிட்டும். அவர்கள் வெகுநாள்களாக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெரிய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு வந்து கதவைத் தட்டும்!

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு, முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு, பல கசப்பான அனுபவங்கள் ஆகியவற்றை அளித்து வந்தார் கேது. இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார்.

ஆகவே, பதற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். எந்த விஷயத்திலும் தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள்.

மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு அனுபவ அறிவு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.  உங்களில் சிலர், வீட்டுக்குத் தேவையானதை வாங்குவீர்கள். சொந்தவீடு கனவு நனவாகும்.

வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது அமர்வதால், முக்கிய ஆவணங் களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வந்துபோகும். வீடு கட்ட தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்ட தொடங்குவது நல்லது. வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச்செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டு, பதவி உயர்வுகளும் வாய்க்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களுக்கு வேலைச்சுமையை தந்தாலும், விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்களை முன்னேறவைப்பதாக அமையும்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கி வழிபடுங்கள்; அன்னதானம் செய்யுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

%d bloggers like this: