ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : விருச்சிகம்

முயற்சியால் முன்னேற்றம் காணும் விருச்சிக ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்குச்  சவாலையும் சந்தோஷத்தையும் ஒருங்கே வழங்கப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

உங்கள் ராசிக்கு 9 – ல் இருந்துகொண்டு, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்த துடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான், இப்போது 8- ல் சென்று மறைகிறார்.

ஆகவே, இதுவரையிலும் பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங் களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பாதியிலேயே தடைப்பட்டுப் போன வேலைகளை இனி பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் முகம் பளிச்சிடும். வீட்டில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். தந்தையுடன் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். இனி அவரின் உடல்நலமும் மேம்படும். தந்தைவழி சொத்திலிருந்த சிக்கல்களெல்லாம் விலகி உங்களுக்கு வரவேண்டியவை முறையாகக் கைக்கு வந்து சேரும்.

எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உங்களின் குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் அடைய நினைப்பதைத் தவிர்த்துவிடவும். அதனால் பிரச்னைகள் மேலும் வளரும்.

குடும்பத்தினரிடம் கண்டிப்பும் கறார் நடவடிக்கைகளும் வேண்டாம்; அவர்களிடம் கனிவுடனும் பாசமாகவும் நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலை நீங்கும். அவர்களின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும். உயர்கல்வி யில் வெற்றிபெறுவார்.

இட வசதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வீட்டை விற்றுவிட்டு, வேறு வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டு வீர்கள். உங்களில் சிலர், வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு சிற்சில விஷயங்களில் தடுமாற்றம் இருந்தாலும், தகுந்த வழிகாட்டலால் வெற்றிபெறுவார்கள். அரசியல்வாதிகள் யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், எதையும் யோசித்து முடிவெடுக்கவேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்களே என்று பெரிய முதலீடுகளை இப்போது செய்யவேண்டாம். இருப்பதை வைத்துப் பெருக்கப் பாருங்கள்.

பழைய பாக்கிகளைக்கூட கொஞ்சம் போராடித்தான் வசூலிக்க நேரிடும். கமிஷன், ஷேர் மார்க்கெட் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம்; கனிவாகப் பேசுங்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள், உங்களின் நிர்வாகத்திறனை அறிந்து அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே உங்களை நம்பி இனி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கலைத்துறையினரின் கவலைகள் நீங்கும். கற்பனைத்திறன் மிகுந்த அவர்களுடைய  படைப்புகளுக்குப் பரிசும் பணமும் உண்டு. பழைய நிறுவனங்கள் மீண்டும் வாய்ப்பளிக்கும். மூத்த கலைஞர்களின் ஆதரவும் பெருகும். ஆகவே, வீண் குழப்பங்களை மனதில் ஏற்றாமல் செம்மையாகச் செயல்படுங்கள்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 3 – ல் இருந்து கொண்டு தைரியத்தையும், தன்னம்பிக்கையை யும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2 – ல் நுழைகிறார்.

சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். ஆனால், சில நேரங்களில் அந்தப் பேச்சாலேயே பிரச்னைகளிலும், வீண் வம்புகளிலும் சிக்கிக் கொள்வீர்கள். ஆகவே, கவனம் தேவை. வெளியிடங்களில் முடிந்தவரை வெளிப் படையாகப் பேசுவதைத் தவிர்க்கப் பாருங்கள். பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். ஆனாலும் உங்களுக் குச் சாதகமான நட்சத்திரங்களில் கேது செல்வ தால் இடையிடையே பண வரவும், யோகமான பலன்களும் உண்டாகும்.

மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக் கும். கல்யாணப் பேச்சுவார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி, திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்களைக் குறைத்து மதிப்பிட்டவர்களே ஆச்சரியப்படும்படி பல சாதனைகளைச் செய்வீர்கள்.

உங்களில் சிலருக்கு அயல்நாட்டுப் பயணங்கள் தேடிவரும். அதனால் ஆதாயமும் உண்டாகும். வாகன பயணத்தில் சிறு சிறு விபத்துகள் நிகழலாம் என்பதல், வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்து போகும்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து நஷ்டப்படாதீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சிலநேரம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், ஓரளவு பணவரவையும், மகிழ்ச்சி யையும் தருவதாக அமையும்.

முருக வழிபாடு உங்களுக்குத் துணை நிற்கும். விசாகத்தன்று நெய்தீபம் ஏற்றிவைத்து வேலவனை வழிபட்டால், வெற்றிகள் கைகூடும்.

ஒரு மறுமொழி

  1. na ena da pavam pannen….intha year romba kastam than….

%d bloggers like this: