சிறப்பான சிவப்பு முட்டைகோஸ்
சிவப்பு முட்டைகோஸில் (Red Cabbage) உள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
அதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே!
ஆடை ஆபரணங்கள் மட்டுமல்ல, தாங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள் பெண்கள். பேக்கின் உள்ளே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, எதையெல்லாம் எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்பார்கள். வாங்கிய சில நாள்களுக்குப் பிறகு கையில்வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் பையில் அடைத்துவிடுவார்கள். பொருள்கள் சேரச் சேர, பையின் எடையும் அதிகரிக்கத் தொடங்கும். `இப்படி அதிக எடையுள்ள பையைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், தோள்பட்டைவலி தொடங்கி, முதுகுத்தண்டுவட பாதிப்புவரை எக்கச்சக்க பிரச்னைகள் ஏற்படலாம்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.