சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா?

அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறைதான். உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையலறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமையலறை உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தையும் பாதுகாக்கும் இடமாக இருக்கிறது. நமது வேதங்கள் வீட்டின் சமையலறை எப்படி நம் வாழ்க்கையை மாற்றக்கூடும் என்பது பற்றி பல குறிப்புகள் உள்ளது.

உங்கள் சமையலறை இருக்குமிடமும் அங்கு இருக்கும் பொருட்களும் உங்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சமையலறையில் செய்யும் சில தவறுகள் உங்கள் குடும்பத்திற்கு துரதிஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் சமயலறையில் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சமையலறை இருக்க வேண்டிய இடம்

வீட்டில் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் உள்ளது. உதாரணத்திற்க்கு நீங்கள் எப்பொழுதும் காய் கழுவும் இடத்தை அடுப்பிற்கு பக்கத்திலேயோ அல்லது கை துடைக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே இருக்காது.

அலுமினிய பாத்திரங்கள்

சில உலோகங்களால் செய்யப்படும் பாத்திரங்கள் கூட உங்கள் வாழ்க்கையில் துரதிஷ்டத்தை உண்டாக்கும் தெரியுமா? இந்து புராணங்களின் படி அலுமினியம் போன்ற குறிப்பிட்ட பாத்திரங்கள் ஒருவரின் விதி மற்றும் ஆரோக்கியத்தை பாதிப்புக்குள்ளாக்கும். சொல்லப்போனால் அலுமினிய பாத்திரங்கள் எதிர்மறை சக்திகளை ஈர்க்கக்கூடும் ஏனெனில் இது ராகுவால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகும். சமையலறையில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பாலை அலுமினிய பாத்திரத்தில் வைக்காதீர்கள்

பாலின் குளிர்ச்சியானது சந்திர பகவானை குறிப்பதாகும். மங்கலகரமான செயல்களுக்கு ராகுவும், சந்திரனும் பொருத்தமான கடவுளாக இருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி இது ஆரோக்கியரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒருபோதும் பாலை அலுமினிய பாத்திரத்தில் சேமிக்காதீர்கள்.

அலுமினிய பாத்திரத்தில் சாதம்

அதேபோல அலுமினிய பாத்திரத்தில் சாதம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அலுமினிய பாத்திரத்தில் சமைக்கும் இல்லத்துக்கு சுக்ர பகவான் வரமாட்டார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் தொடர்ந்து அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

வீட்டிற்க்கு நடுவில் சமையலறையை கட்டாதீர்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு மையத்திலேயோ அல்லது வீட்டை முகப்பிலோ சமையலறையை நிறுவுவது உங்களுக்கு நல்லதல்ல. எப்போதும் வீட்டிற்கு பின்புறத்திலோ அல்லது அதற்கு அருகிலோ இருக்கும்படி கட்டவேண்டும்.

சிவப்பு பெயிண்ட்

சிவப்பு நிறம் என்பது நெருப்பை குறிக்கும் நிறமாகும். சமையலறையில் எப்பொழுதும் நெருப்பு நிரந்தரமாக இருப்பதாகும். எனவே நெருப்பின் ஆற்றல் அளவுக்கதிகமாக இல்லாமல் இருக்க சமையலறைக்கு சிவப்பு பெயிண்ட் அடிக்காதீர்கள்.

சமையலறைக்கு மேலே கழிவறை

சமையலறைக்கு மேற்புறமோ அல்லது கீழ்ப்புறமோ கழிவறையோ அல்லது படுக்கையறையோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சமையலறைக்கு மேற்புறம் கழிவறை இருந்தால் அது எதிற்மறை சக்தியை உறிஞ்சி நம் இல்லத்தில் இருக்கும் நேர்மறை சக்திகளை அழித்துவிடும்.அதேபோல கழிவறை சமையலறைக்கு கீழே இருந்தால் உங்கள் வீட்டில் உள்ள நேர்மறை சக்திகள் வீணாக சென்றுவிடும்.

தவறான திசைகள்

வடமேற்கு மற்றும் தென்வடக்கு திசையில் சமையலறை ஒருபோதும் வைக்காதீர்கள். இடந்த் இரண்டு திசைகளில் ஒருபோதும் சமையலறை வைக்கக்கூடாது. இந்த திசையில் உங்கள் சமையலறை இருந்தால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் வறுமை குடியிருக்கும். மேலும் உங்கள் தொழிலில் எப்பொழுதும் நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படி இருந்தால் உங்கள் சமையலறையில் நெருப்பு தொடர்பான பொருட்களான தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவை இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

%d bloggers like this: