நினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க!

படித்தவுடன் வேலை கிடைக்குமா?

படித்து முடித்தவுடனேயே வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்விதமான முயற்சிகள் உங்களுக்கு ஏற்ற வேலையைத் தேடித் தரும்?

படித்த துறையிலேயே வேலை

நீங்கள் படித்த துறையிலேயே வேலை வாய்ப்பைப் பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் வைத்து உங்களது எதிர்காலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும் சற்று பொறுமையாக வேலை தேடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று மறவாதீர்கள்.

ஆன்லைன் வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு தொடர்பான இணையதளங்களில் உங்களுடைய சுயவிபரங்களை பதிவேற்றம் செய்து வையுங்கள். நாட்குரி, லிங்கிடு-ன் போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்குத் தெரிய வரும்.

வேலை வாய்ப்பு நிர்வாகம்

வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பாலம் போல செயல்படும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள். இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற கண்சல்டன்சி மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

ஈகோ பார்த்தா அவ்வளவுதான்…

நம்மில் சிலருக்கு இன்னும்வேலை இல்லாமல் இருப்பதற்குக் காரணமே யாரிடமும் நான் வேலை கேட்டு நிக்க மாட்டேன் என்ற வெட்டிக் கவுரவமே. இதுபோன்ற ஈகோ, கவுரவங்களைக் கொஞ்சம் ஒதுப்பி வச்சுட்டு உங்க துறையில் பணி புரியும் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம்.

உங்களிடமே நீங்கள் கேளுங்கள்..

மேலே குறிப்பிட்டுள்ளது போல நீக்கள் முயற்சிகள் மேற்கொண்டாலும், கூடவே பின் வரும் சில குறிப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். அதில், குறிப்பாக உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தைக் காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் சிந்தனை ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள்.

உங்கள் முன்னேற்றத்தை அளவிடுங்கள்

எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாகும். உங்களின் இலக்கு, அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக திட்டமிடுங்கள்.

நண்பர்களை தொடர்புகொள்ளுங்கள்

உங்களுடன் படித்தவர்கள், நண்பர்கள், தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிடுங்கள்

உங்கள் வேலை பழு அதிகமாக இருந்தாலும், அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது தவறானது. பெற்றோர்கள், நண்பர்கள் என்று அவர்களுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும்.

இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் எதற்காகப் படித்தீர்கள், எதற்காக இத்துறையை தேர்வு செய்து பணியாற்றுகிறீகள் என இலக்கை எப்போதும் மறக்காமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!

%d bloggers like this: