இறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா? அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா?

இறந்தவர்களை கனவில் பார்ப்பதன் அர்த்தம்

கனவுகளுக்கு என்று பல குணங்கள் உள்ளது. நமது ஆழ்மனதுதான் நமக்கு கனவுகளை பற்றி வெளிப்பாடுகளையும், அறிவுறுத்தல்களையும் செய்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இந்த கனவுகளை நாம் சரியாக புரிந்து கொள்ள முயன்றால் நம்முடைய வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றும்

பல நுணுக்கங்களை அறியலாம். இறந்தவர்கள் உங்கள் வாழ்வில் வர உளவியல்ரீதியாகவும், ஆன்மீகரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது.

இறந்த ஆன்மாக்கள்

இறந்த ஆன்மாக்கள் பெரும்பாலும் உங்களை கனவில் மூலமாகத்தான் தொடர்பு கொள்வார்கள். இறந்தவர்களுக்கு நீங்கள் விழித்திருக்கும் நேரத்தை விட தூங்கும் நேரத்தில் உங்களை தொடர்பு கொள்வது மிகவும் எளிதாகும். நீங்கள் விழித்திருக்கும் போது உங்களின் ஐந்து உணர்வுகளும் விழித்திருக்கும். அதீத ஆன்ம பலம் கொண்டவர்களை தொடர்பு கொள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். மற்றொரு புறம் கனவு காணும்போது உங்கள் ஆழ்மனது வெளிப்புற செய்திகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும், அதனாலதான் ஆன்மாக்கள் இரவு நேரத்தை நம்மை தொடர்பு கொள்ள தேர்வு செய்கிறது.

உளவியல் காரணங்கள்

நமக்கு பிடித்த இறந்தவர்கள் நமது கனவில் வர நமது குற்றவுணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அவர்கள் உயிருடன் இருந்த போது நாம் அவர்களுக்கு செய்த தவறுகளோ அல்லது அவர்களுக்கு செய்யாமல் விட்ட நல்லதுகளோ நமது மனதில் ஒரு தீரா குற்றஉணச்சியை ஏற்படுத்தியிருக்கும். இதன் விளைவாகவே அவர்கள் நமக்கு அடிக்கடி கனவில் வருவது போல தோன்றலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில், நம் ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்தான் இந்த கனவுகள்.

ஆன்மீக காரணங்கள்

இறந்தவர்கள் உங்கள் கனவில் வர இரண்டு முக்கியமான ஆன்மீக காரணங்கள் உள்ளது. சில சமயங்களில், இறந்த ஆன்மாக்களுக்கு அவர்களின் மறுவாழ்வில் உங்கள் மூலம் சில உதவிகள் தேவைப்படலாம். அதேசமயம் அவர்களுக்கு யாரையாவது பழிவாங்க வேண்டுமென்று நினைத்தால் அவர்கள் உங்கள் கனவின் மூலம் உதவி கேட்கலாம். அவர்களின் குடும்பத்திற்கு உங்கள் மூலம் ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று விரும்பினாலும் உங்களை கனவின் மூலம் தொடர்பு கொள்வார்கள். முதல் காரணம்தான் பெரும்பாலும் ஆன்மாக்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முக்கிய காரணமாகும்.

ஆன்மீக கனவை புரிந்து கொள்வது எப்படி?

ஒரே கனவை மீண்டும் மீண்டும் பார்த்தால் அது ஆன்மீக கனவு என்று பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது மூன்று முறையாவது அந்த கனவு மீண்டும் மீண்டும் வரவேண்டும். இறந்த ஆன்மா உங்களை முழுமையாக நம்ப வேண்டுமென்றால் நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டும். பின் அந்த ஆன்மா உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யும். அந்த ஆன்மா தங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றும் அவற்றின் மறுவுலக வாழ்வில் இருக்கும் தடைகளையும் உங்களுக்கு உணர்த்தும்.

எதிர்பாராத மரணம் அடைந்தவர்கள் ஏன் வருகிறார்கள்?

இயற்கை மரணம் அடைந்தவர்களும், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இறந்தவர்களோ தங்களின் மரணத்தை முன்கூட்டியே அறிவார்கள். எனவே அவர்களுக்கு இறப்பிற்கு பிறகான வாழ்க்கையை பற்றிய பயமோ, தடையோ எதுவும் இருக்காது. ஆனால் எதிர்பாராத நேரத்தில் விபத்தினாலோ அல்லது கொலைசெய்யப்பட்டோ இறந்தவர்களுக்கு மரணத்தை பற்றிய எந்த சிந்தனையும் இருக்காது. எனவே அவர்களுக்கு மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் துயரங்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே அவர்கள் உங்களின் உதவியை நாட்டுவதற்காக உங்கள் கனவில் வரலாம்.

எப்படி உதவலாம்?

இந்த நினைவுகளில் இருந்து உங்களை நீங்கள் விடுவிக்க விரும்பினால் முதலில் உங்களை நீங்களே வருத்தி கொள்வதை நிறுத்துங்கள். ஸ்ரீ கருடதேவ் தத்தா என்னும் மந்திரத்தை தொடர்ந்து கூறுங்கள். ஒருவேளை உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தால் அவர்களுக்கான இறுதிச்சடங்குகளில் குறை உள்ளது என்று அர்த்தம். எனவே அவர்களின் ஆன்மா அமைதியடையும் வகையில் அதற்கான சடங்குகளை மீண்டும் ஒருமுறை செய்யுங்கள். இதன் மூலம் இறப்பிற்கு பிறகான அவர்களது வாழ்க்கை நிம்மதி நிறைந்ததாக இருக்கும்.

%d bloggers like this: