Daily Archives: பிப்ரவரி 13th, 2019

எல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..? மிரட்டும் வருமான வரி துறை..? நமக்கு என்ன லாபம்..?

ஏன்..?

எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமான வரி சொல்லும் நேரத்துக்குள் தங்கள் வருமான வரியை செலுத்தி வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 5,000 ரூபாய் அபராதத்தோடு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக் கெடு கொடுக்கப்படுகிறது. அப்படியும் வரி செலுத்தாதவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதத்தோடு வரி தாக்கல் செய்ய வேண்டும்.

நோட்டீஸ்
Continue reading →

TV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….

தொலைக்காட்சி சேனல்களை சந்தாதாரர்களின் விருப்ப படி தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கான காலக்கெடு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கூறியுள்ளது
Continue reading →

குழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா? கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?

மூலிகைகள் என்றால் என்ன?

நறுமணம் கொண்ட, சுவையான, மருத்துவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் சில வகை தாவரங்கள் மற்றும் தாவரத்தின் பகுதிகள் மூலிகை என்று அழைக்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் உணவில் தாளிப்பாக, ஒப்பனை பொருட்கள் மற்றும் வாசனை திரவியம் தயாரிப்பதற்காக மற்றும் மூலிகை மருந்து வடிவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு
Continue reading →

100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..!

அறிவு ஜீவி!

நாம் பிறரை விளையாட்டாக கிண்டலும் கேலியும் செய்வதற்கே “அறிவு ஜீவி” என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்துவோம். ஆனால், உண்மையிலே இந்த பெயருக்கு ஏற்ற சிறந்த மனிதர் சாணக்கியர் தான். வாழ்க்கையை அணு அணுவாக பிளந்து புரிதலுடன் பலவித கருத்துக்களை கூறியுள்ளார்.

உயிரும் உடலும்!
Continue reading →

மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!

மாசியில் நீராடல் பங்குனியில் தேரோடல்’ என்பது முதுமொழி. மாசி மாதத்தில் ஆறுகள், கடற்கரைகளில் நீராடி ஈசனை வழிபடுவது என்பது பெரும்பேறு அளிக்கும் புண்ணிய காரியங்கள் என்று அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள். குறிப்பாகக் காவிரி ஆற்றில் நீராடுவது மிகவும் விசேஷம்.

மகாசித்த புருஷரான அகத்தியரே மாசி மாதத்தில், காவிரியில் நீராடி வரம்பெற்ற திருக் கதையை மிக அற்புதமாக விவரிக்கின்றன புராணங்கள். இந்தக் கதை நிகழ்ந்த காரணத்தால் மூன்று க்ஷேத்திரங்களின் மகிமைகள் இந்தப் பூவுலகுக்குத் தெரியவந்தன.

ஆம்! கடம்பர் கோயில், திருவாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்றும்தான் அந்த க்ஷேத்திரங்கள். அகத்தியரின் காலம்தொட்டே மாசி நீராடல் அதுவும் காவிரியில் நீராடல் தொடங்கியிருந்தது என்பதை நமது புராண நூல்கள் கூறுகின்றன. அதிலும் இந்த மூன்று திருத்தலங்களையும் ஒரேநாளில் முறையே காலை, நண்பகல், மாலை என்ற வரிசைப்படி தரிசித்து வழிபடுவது சிறப்புக்குரியதாகும். இதனால், முற்பிறப்புகள் தொட்டு இப்பிறவி வரையிலும் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக விலகும்; சகல விதமான வளங்களும் நன்மைகளும் வாய்க்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த ஒருநாள் தரிசனத்தை அகத்திய மாமுனியே தொடங்கி வைத்துள்ளார் என்பது கூடுதல் விசேஷம். வாருங்கள் அதுபற்றிய கதைக்குள் செல்வோம்!

காவேர மகரிஷியின் பெண்ணாக அவதரித்த காவிரி, அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தை அடைந்ததையும், விநாயகப்பெருமான் காகமாக உருமாறி வந்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியைப் பெரும் நதியாய் பெருகியோடச் செய்த கதையையும் நாம் எல்லோருமே அறிவோம்.

Continue reading →