குழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா? கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?

மூலிகைகள் என்றால் என்ன?

நறுமணம் கொண்ட, சுவையான, மருத்துவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் சில வகை தாவரங்கள் மற்றும் தாவரத்தின் பகுதிகள் மூலிகை என்று அழைக்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் உணவில் தாளிப்பாக, ஒப்பனை பொருட்கள் மற்றும் வாசனை திரவியம் தயாரிப்பதற்காக மற்றும் மூலிகை மருந்து வடிவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு

குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தவும் இந்த மூலிகைகள் பயன்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பல் முளைக்கும் காலத்தில் உண்டாகும் தொந்தரவுகள், வாய்வு போன்ற சிறிய பிரச்சனைகளையும், தட்டம்மை, பெரியம்மை போன்ற தீவிர நிலைகளையும் குணப்படுத்த இந்த மூலிகைகள் உதவுகின்றன.

எப்போது பயன்படுத்தணும்?

குழந்தைகள் கிருமிகள் தாக்கத்திற்கு உள்ளாகி நோய்வாய்ப் படும்போது அல்லது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக தினசரியும் இந்த மூலிகைகளை உபயோகிக்கலாம். குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையானது என்பதால், இந்த மூலிகைகள் உடலில் விரைவாகவும் சிறப்பாகவும் வேலை செய்கிறது. சரியான மற்றும் முறையான விதத்தில் நிர்வகிக்கும்போது, இன்றைய ஆங்கில மருந்துகளை விட இத்தகைய மூலிகைகள் குழந்தைகளின் உடலில் அற்புதமாக வேலை புரிந்து குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைய வைக்க ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

எந்த பகுதி

பொதுவாக ஒரு செடியின் பல்வேறு பகுதிகள் மருத்துவ குணம் பொருந்தியதாக உள்ளது. பூக்கள், விதைகள், பழங்கள், கொட்டைகள், இலைகள், தண்டு, வேர் போன்ற பல்வேறு பகுதிகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகிறது. இருப்பினும் இதன் பயன்பாடு, பயன்படுத்தப்படும் நோக்கத்தைச் சார்ந்தது.

எந்த மூலிகைகள்

குழந்தைகள் சாப்பிடும் உணவில் இந்த மூலிகைகளை சேர்த்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மூலிகைக் குளியல் மிகவும் ஏற்ற ஒரு செயலாகும். பல நிபுணர்கள் கூட, இந்த மூலிகைக் குளியலைப் பரிந்துரைக்கின்றனர். பல்வேறு மூலிகைகளை ஒன்றாகக் கலந்து குளிக்க வைப்பதால் உடல் அந்த மூலிகைகளின் அற்புதமான குணப்படுத்தும் தன்மைகளை உறிஞ்சிக் கொள்கிறது. மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிரப் அல்லது டின்ச்ச்சர் போன்றவை இத்தகைய மூலிகைகளை எளிதாக கையாள உதவுகிறது.

மூலிகை குளியல்

சரியான முறையில் குழந்தைக்கு மூலிகை குளியல் தயாரிப்பது எப்படி என்பதை இப்போது காணலாம்..

தேவையான பொருட்கள்:

காய வைத்து எடுத்த மூலிகைகள் 1/4 கப் அல்லது புதிதாக பறித்த மூலிகைகள் 1/2 கப்

அரை கேலன் சூடான நீர்

மூடி உள்ள பெரிய பாத்திரம்

செய்முறை

பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி அதில் எல்லா மூலிகைகளையும் போட்டு ஊறவைத்து பாத்திரத்தை மூடி 45 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பிறகு அந்த நீரை வடிகட்டி, குளிக்கும் நீரில் சேர்த்து விடவும்.

இந்த நீரில் உங்கள் குழந்தையை 10 நிமிடங்கள் குளிக்க வைக்கவும்.

காலெண்டுலா

எளிதில் வளரக் கூடிய இந்த செடியின் குணம் மிகவும் அற்புதமானது. பல்வேறு சரும பிரச்சனைகளான எக்சிமா, சிவந்த சருமம் அல்லது சரும அழற்சி, வறண்ட அல்லது அரிக்கும் சருமம், காயம் அல்லது பூச்சிக்கடி போன்றவற்றிற்கு நல்ல தீர்வைத் தருகிறது. காலெண்டுலா பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதால் சரும பிரச்சனைகளைப் போக்கி சருமத்திற்கு இதமளிக்கிறது. டயப்பர் அணிவதால் உண்டாகும் தடிப்புகள், தொட்டிலில் உறங்குவதால் உண்டாகும் தடிப்பு , ஆகியவை உங்கள் குழந்தையின் சருமத்தில் இருந்தால் அவற்றைப் போக்க மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது இந்த மூலிகை.

எவ்வாறு பயன்படுத்தலாம்

இந்த காலெண்டுலா செடியின் மலர்களைக் குழந்தை குளிக்கும் நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு குழந்தையை அந்த நீரில் குளிக்க வைக்கவும். காலெண்டுலா க்ரீம், மற்றும் லோஷன் போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம் அலல்து இதன் பூக்களை சமையலில் பயன்படுத்தலாம்.

தைம்

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மூலிகைகளில் சிறந்தது இந்த மூலிகை. குழந்தைகளின் காய்ச்சல், சளி மற்றும் காது தொடர்பான தொற்று ஆகியவற்றைப் போக்க உதவி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இந்த மூலிகை. உங்கள் குழந்தைக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தொடங்கியவுடன் எக்கிநேசியாவை கொடுப்பதால் காய்ச்சலின் தீவிரம் குறைவதை உங்களால் உணர முடியும். காய்ச்சல் அதிகமாக பரவும் காலத்தில் குழந்தைக்கு இந்த மூலிகையை கொடுப்பதால் உங்கள் வீட்டு குழந்தைக்கு காய்ச்சல் வராமல் தடுக்கமுடியும்.

இதனை எப்படி பயன்படுத்தலாம்?

இந்த மூலிகை மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு எடுத்து உணவு அல்லது ஜூஸில் கலந்து உங்கள் குழந்தைக்கு கொடுப்பது ஒரு சிறந்த முறையாகும். இந்த மூலிகையை காய வைத்து அல்லது புதிதாக செடியில் இருந்து பறித்து மூலிகை குளியல் தயாரித்து குழந்தையை குளிக்க வைக்கலாம்.

செவ்வந்தி பூ

குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாக இந்த செடி இருப்பது அவசியம். இது பல அற்புத தீர்வுகளைத் தரும். எல்லா மூலிகை செடிகளையும் விட சிறப்பாக செயல் புரியும் இந்த செடி, நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்து, ரிலாக்ஸ் செய்கிறது. மேலும் பல உடல் பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் நிரூபிக்கப்படுகிறது. செரிமான மண்டலத்திற்கு உதவுகிறது, வயிற்றுக்கு இதமளிக்கிறது, பதட்டத்தைப் போக்குகிறது, வயிற்றுப்போக்கு, வாய்வு, அமில தொந்தரவு, அஜீரணம், தொற்று பாதிப்பு போன்றவற்றைப் போக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து, காயங்களைப் போக்க உதவி, சரும பாதிப்புகளைப் போக்கி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

இதனை எவ்வாறு பயன்படுத்தலாம்

உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் குழந்தைக்கு செவ்வந்தி குளியல் நல்ல பலனைத் தரும். செவ்வந்தி பூ கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான தேநீர் கொடுப்பதும் நல்லது.

அஸ்ட்ராகேலஸ்

பல்வேறு இதர மூலிகையைப் போல் அஸ்ட்ராகேலஸ் செடியும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. ஒருவேளை குழந்தையை நோய் தாக்கினால், நோய்க்கான காலம் குறைந்து எளிதில் குழந்தை குணமடைய உதவுகிறது. காய்ச்சல் அல்லது நோய் தாக்கத்திற்கு பின் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

இதனை எவ்வாறு பயன்படுத்தலாம்:

தேநீர் தயாரிக்கும்போது, சூப், அல்லது ஸ்டூ தயாரிக்கும்போது அல்லது சாதம் தயாரிக்கும்போது ஒரு சிறிய அளவு அஸ்ட்ராகேலஸ் வேரை எடுத்து சேர்த்து தயாரிக்கலாம். இந்த வேரை அப்படியே சாப்பிடக் கூடாது, இந்த வேரை கொதிக்க வைத்து பயன்படுத்துவதால், அதன் நன்மைகள் நீங்கள் தயாரிக்கும் உணவில் சேர்ந்து பல அளிக்கும்.

எல்டர் பெர்ரி மற்றும் எல்டர் பூ

இது மற்றும் ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இந்த மூலிகை செடி குழந்தைகளை காய்ச்சலில் இருந்து பாதுகாக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த மூலிகை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதால், சளி, இருமல், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று , காய்ச்சல் ஆகியவற்றின் சிகிச்சைக்கு பெரிதும் பயன்படுகிறது. எல்டர்பெர்ரி செடி குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலை குணப்படுத்துகிறது மற்றும் காய்ச்சலுக்கான காலத்தைக் குறைக்கிறது. மூக்கடைப்பைப் போக்கவும் இந்த மூலிகை பயன்படுகிறது.

இதனை எவ்வாறு பயன்படுத்தலாம்?

குழந்தையின் மிருதுவான செரிமான மண்டலத்திற்கு உதவும் நோக்கத்தில் அவ்வப்போது எல்டர்பெர்ரி சிரப் கொடுக்கலாம். எல்டர் பூ கொண்டு தயாரித்த நீரில் குழந்தையை குளிக்க வைக்கலாம். இதனால் அவற்றின் நன்மைகளை குழந்தையின் சருமம் உறிஞ்சிக் கொள்ள முடியும்.

மூலிகை சேர்த்த உணவுகள்

குழந்தைகள் சாப்பிடும் உணவில் இந்த மூலிகைகளை சேர்த்து கொடுப்பது அவர்கள் இவற்றை எடுத்துக் கொள்ளும் ஒரு சிறப்பான வழியாகும். அதனால் குழந்தைகளுக்கான உணவில் மூலிகைகளை சேர்த்து தயாரிப்பது எப்படி என்பதை இப்போது காணலாம்,

வெஜிடபிள் சாதம்

இந்த உணவு மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த உணவில் அஸ்ட்ராகேலஸ் சேர்க்கப்பட்டிருப்பதை உங்கள் குழந்தையால் கண்டுபிடிக்க முடியாது. மேலும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

தேவையான பொருட்கள்

1 கேரட் – சிறியதாக நறுக்கியது

1 பார்ஸ்னிப் – சிறிதாக நறுக்கியது

1 துண்டு அஸ்ட்ராகேலஸ் வேர்

1 ஸ்பூன் மூலிகைக் கலவை

1/2 கப் பழுப்பு அரிசி

செய்முறை

ஆலிவ் எண்ணெயில் கேரட் மற்றும் பார்ஸ்னிப்பை மென்மையாகும் வரை வதக்கவும்.

மூலிகைக் கலவை, அஸ்ட்ராகேலஸ் வேர், அரிசி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .

இந்த கலவையில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன், 40 நிமிடங்கள் சிம்மில் வைத்து அரிசி வேகும் வரை காத்திருக்கவும்.

பிறகு அதில் இருந்து அஸ்ட்ரா கேலஸ் வேரை எடுத்து விடவும்.

தக்காளி மற்றும் காலெண்டுலா ரசம்

மழை மற்றும் குளிர் காலங்களில் இயல்பாகவே தோன்றும் காய்ச்சல், சளி போன்றவற்றைப் போக்க உதவும் காலெண்டுலா. இது மிளகு போன்ற சுவையைத் தரும் ஒரு பொருள். ஆர்கானிக் செடிகளை பயன்படுத்தி சமைப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

2 தக்காளி

1 காலெண்டுலா பூ

1/2 ஸ்பூன் சீரகம்

2 பூண்டு பற்கள்

புதினா சிறிதளவு

ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு தேவையான அளவு

செய்முறை

தக்காளியை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

சீரகம் மற்றும் பூண்டை எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த சீரகம் மற்றும் பூண்டை தக்காளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரில் காலெண்டுலா பூக்களை கொதிக்க விடவும்.

எண்ணெய்யை வாணலியில் சூடாக்கி, அதில் தக்காளி விழுது, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.

காலெண்டுலா பூக்கள் கொதிக்க வைத்த நீரில் இருந்து அவற்றை நீக்கி அந்த நீரை தக்காளி கலவையுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

புதினா இலைகளை மேலே தூவி இறக்கவும்.

எல்டர்பெர்ரி சியா புட்டிங்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு சுவையில் ஒரு புட்டிங் செய்வது பற்றி இப்போது நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்

1/2 கப் சியா விதைகள்

2 கப் பால்

1/2 கப் வெனிலா சாறு

வெல்லம் சுவைக்கேற்ப

3 ஸ்பூன் எல்டர் பெர்ரி சிரப்

செய்முறை

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

15 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின் மீண்டும் கலக்கவும்.

பாத்திரத்தை மூடி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்கவும்.

பின்பு இதனை எடுத்து பரிமாறவும்.

மேலே கூறிய மூலிகைகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முன்பு, அவற்றைப் பற்றிய ஒவ்வாமை குழந்தைக்கு உள்ளதா என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்தவும். முதலில் குழந்தையின் உடலில் ஒரு சிறு பகுதியில் அந்த மூலிகையை தடவி பரிசோதிக்கவும். எதிர்மறை வினைகள் எதுவும் குழந்தையின் சருமத்தில் ஏற்படாமல் இருந்தால் தொடர்ந்து இதனை பயன்படுத்தவும். அல்லது உடனே அவற்றை நீக்கி விடவும். மேலும் இந்த மூலிகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அதனைப் பற்றி நன்கு அறிந்தவர் முன்னிலையில் கொடுப்பது அனைவருக்கும் பாதுகாப்பானது.

%d bloggers like this: