இந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..!

ஆய்வு!

பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களின் உணவு முறையை பற்றி பலவித ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. காரணம், இந்த வகை உணவுகளால் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை, புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகிறதாம்.

பலவிதம்!

குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் பலதரப்பட்ட ஆதிவாசி இனங்கள் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிதமான உணவு பழக்கம் உள்ளது. முக்கியமாக தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் உண்ணும் உணவு முறை நாம் உண்ணும் உணவு முறைக்கு ஏற்றதாக அமையும்.

காலை உணவு

பெரும்பாலும் காலை நேரத்தில் பழங்களை உண்ணும் பழக்கம் பழங்குடி மக்களுக்கு உள்ளது. இதனால் தான் இன்றும் பளுவுடன் இருக்கிறார்கள். மேலும், கம்பு, வரகு போன்றவற்றை அடை போல செய்து சாப்பிடுவார்கள்.

கிழங்கு வகை

பழங்குடி மக்களுக்கும் கிழங்குகளுக்கும் என்றுமே ஒரு தொடர்பு உள்ளது. பழங்களை அதிக அளவில் உண்ணுவது போலவே இவர்கள் கிழங்கு வகை உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். சேனை கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை பழங்குடி மக்கள் உணவில் முக்கியமாக சேர்த்து கொள்வார்கள்.

கால மாற்றம்

நாம் சாப்பிடுவதை போலவே காலத்திற்கேற்ற உணவு முறையும் இவர்களுக்கு உண்டு. குளிர் காலத்தில் வேறுவித உணவுகள், வெயில் காலத்தில் வேறு வித உணவுகளை இவர்கள் உண்பார்கள். பெரும்பாலும் வெயில் காலத்தில் தானிய வகைகள், காளான் முதலிய உணவுகளை சாப்பிடுவார்கள்.

அசைவ உணவுகள்

பழங்குடி மக்கள் என்றதும் அவர்கள் மனிதர்கள், காட்டு விலங்குகளை அடித்து தின்பார்கள் என்கிற மனப்பாங்கு நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இது உண்மை கிடையாது.

இவர்கள் அந்த அளவிற்கு பயங்கர உணவுங்களை சாப்பிடுவதில்லை. மாறாக மீன், நண்டு, நத்தை, ஆடு, மாடு, கோழி போன்ற அசைவ உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள்.

தேன்

நீண்ட நாட்கள் கெடாத உணவுகளில் தேன் தான் முதலிடத்தில் உள்ளது. பழங்குடி மக்கள் பெரும்பாலும் தேனை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். எந்த வகை உணவாக இருந்தாலும் அதில் தேன் இடம்பெறுவது சகஜமே. இவற்றில் உள்ள மருத்துவ குணம் தான் நீண்ட ஆயுளை பெற மூல காரணமாக உள்ளதாம்.

குளிர் காலங்களில்

குளிர் காலத்தில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது இவர்களின் வழக்கம். அத்துடன் சாப்பிட கூடிய உணவை சூடாகவே இந்த குளிர் காலங்களில் உண்ணுவார்கள். சேனை கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவரை வேக வைத்து சாப்பிடுவார்கள்.

கீரைகள்

தினசரி உணவில் கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றாவது இடம் பெற்றிருக்கும். இவர்களின் உற்பத்தி முறையும், உணவு முறையும் இயற்கையை என்றுமே சார்ந்திருக்கும். இதுவும் தான் பழங்குடி மக்கள் அதிக ஆயுளுடன் வாழ்வதற்கு முக்கிய காரணம்.

மசாலாக்கள்

சாப்பிடும் உணவில் பலவித மூலிகை தன்மை மிக்க மசாலாக்களை சேர்த்து உண்ணுவார்கள். இது அவர்களை அதிக ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். மஞ்சள், அதிமதுரம், கிராம்பு, பட்டை, இலவங்கம், கடுக்காய் போன்ற பல மூலிகைகள் அவர்களின் உணவிலும் இடம் பெறும்.

%d bloggers like this: