நைட் ஷிஃப்டுல வேலையா? அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்! என்ன நோய்னு தெரியுமா?

சுமைகள்!

இன்றைய இளைய தலைமுறை பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு புறம் குடும்ப கஷ்டம், ஒரு புறம் கனவுகளை அடைய வேண்டுமே என்கிற தவிப்பு, ஒரு புறம் சமூக அவலங்கள், ஒரு புறம் காதல் பிரச்சினைகள்… இப்படி பல கூறுகளால் இன்றைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றின் அழுத்தத்தால் தான் பலரும் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்கின்றனர். சுமையை கரைக்க செல்பவர்களுக்கு மேலும் பல சுமைகளை இவை தருகின்றன.

இரவும் பாதிப்பும்!

இரவு வேலைக்கு செல்பவர்கள் சாதாரணமாக காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்களை காட்டிலும் பல வகையில் பாதிப்பை சந்திக்க நேரிடும். காரணம், சிறு வயது முதலே நமது உடல் இரவில் ஓய்வெடுக்க பழகி கொண்டது.

ஆனால், தற்போது இரவில் ஓய்வெடுக்காமல் பகலில் கொஞ்சம் நேரம் மட்டும் ஓய்வெடுத்தால் நம் உடல் என்னவாகும் என்பதை நீங்களே சிந்தியுங்கள். இதில் உள்ளுறுப்புகள் முதலில் அபாய நிலைக்கு செல்லும்.

ஆய்வு!

பலவித ஆய்வுகள் இந்த நைட் ஷிஃப்ட்டில் வேலைக்கு செல்பவர்களை வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் அனைத்துமே நைட் ஷிஃப்ட் வேலையை பற்றி ஆபத்தான விளைவுகளை தந்துள்ளது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது DNA- தான்.

DNA மாற்றம்!

பொதுவாக மனித உடல் இந்த அளவிற்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதற்கு மூல காரணமே இந்த DNA தான். இதில் மாற்றமோ அல்லது சிதைவடைந்தாலோ ஆபத்து நமக்கே.

DNA சிதைவடைவதால் அடுக்கடுக்காக நோய்கள் நமது உடலுக்குள் ஊடேறி நோய்களின் கூடாரமாகவே மாறி விடும்.

வீரியும்!

DNA பாதிப்பதால் புற்றுநோய், நரம்பு மண்டலம் பாதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த நாளங்களை நோய்கள் தாக்குதல்… இது போன்ற வீரியமிக்க தாக்குதல்கள் நம் உடலில் உண்டாகும். 25 முதல் 30 சதவீகிதம் வரை நைட் ஷிப்ட்டினால் DNA சிதைவடையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

காரணம்?

உடலில் ஏற்பட கூடிய ஒவ்வொரு மாற்றத்திற்கும் கட்டாயம் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் இப்படி DNA மாற்றம் உண்டாகுவதற்கு மூல காரணமே நமது தூக்கம் தான். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் வேலை செய்வதால் நமது DNA சிதைவடைகிறது.

ஆய்வின் முடிவு?

ஹாங் காங் பல்கலைக்கழத்தில் இதை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் மேற்சொன்ன பாதிப்புகள் உண்டாகும் என கண்டறிய பட்டுள்ளது.

கூடவே, நமது உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றாக தனது இயல்பு தன்மையை இழந்து செல்கள் இறக்க நேரிடும் என்கிற திடுக்கிடும் தகவலையும் இது வெளியிட்டுள்ளது.

நாள்பட்ட நோய்கள்!

இந்த நிலை, நைட் ஷிஃப்டில் வேலை பார்பவர்களுக்கு கட்டாயம் வர கூடும் என ஹாங் காங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிட்டு சொல்ல போனால் நாள்பட்ட நோய்கள் மற்றும் DNA சிதைவு போன்ற பாதிப்புகள் நிச்சயம் வரும் எனவும் கூறியுள்ளனர்.

தீர்வு!

வாழ்க்கைக்காக ஓட தொடங்கிய நம்மில் பலர் இப்போது எங்குள்ளோம் என்பதை 1 நொடி சிந்தித்து பாருங்கள். “வாழ்க்கை வாழ்வதற்கே” என்கிற உயிர்ப்பான வார்த்தைகளை பலர் மறந்து விட்டனர்.

வீட்டில் இருக்கும் சுமைகளுக்காக உழைக்கின்ற உங்களுக்கு மேற்சொன்ன அபாயங்கள் உண்டாகாமல் இருக்க நிச்சயம் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளை தவிர்க்க வேண்டும்.

எவ்வளவு வேலை செய்தாலும் உங்களுக்காக தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஒதுக்கி உங்களை பற்றி, உங்கள் சுயத்தை பற்றி ஆராயுங்கள். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம் உங்களுக்கான சிறப்பான வாழ்வு நிச்சயம் கிடைக்கும் நண்பர்களே.

%d bloggers like this: