கமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி! இது எப்படி இருக்கு?

திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் ஹாசனையும்,  அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்தையும், வாய்ஸ் கொடுக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக ,அதிமுகவுக்கு எதிராக   மக்கள் நீதி மையம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் கமல் ஹாசனுக்கு, நாடாளுமன்றத் தேர்தல் பெரிய சவாலாக மாறியுள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் அறிவித்தாலும், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந் நிலையில் மத்தியில் பாஜகவை அவர் விமர்சனம் செய்து வரும்நிலையில், மத்தியில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில், அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக அவர் வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அவரை தொடர்பு கொண்டதாகவும்,  அதற்குப் பரிசாக ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் தகவல்.

இந்த ஐடியாவுக்கு கமல் ஓகே சொல்லி உள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாகவும், அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி இன்னும் தொடங்காத ரஜினி காந்தையும் பாஜக, அதிமுக தரப்பு அணுகி, வரும் தேர்தலில் மோடி பிரதமராக வெறும் வாய்ஸ் மட்டும் கொடுத்தால் போதும், அதற்குப் பரிசாக ராஜ்யசபா எம்பி ஆக்குகிறோம் என்று கூறியதாகவும், இதற்கு ரஜினியும் ஓகே சொல்லியதாகவும், மகள் திருமணம் முடிந்ததும் இது குறித்து சொல்கிறேன் என்று சொல்லியதாகவும் தகவல். 

இதனால்தான் அவரது மகள் திருமணத்தில் அதிமுக தரப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக. தேர்தலில் போட்டியிடாமலேயே கமலும், ரஜினியும் எம்பி ஆகிறார்கள் என்பதுதான் இப்போதைக்கு அரசியலில் ஹாட் டாபிக்.

%d bloggers like this: