அதிமுக-பாஜக கூட்டணி 25-15 என தொகுதிப் பங்கீடு செய்துள்ளதாக தகவல்!

வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்திருந்தார். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்.இராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அமைச்சர் தங்கமணியுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் 3 மணி நேரமாக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாஜக-அதிமுக கூட்டணி 25-15 என்ற கணக்கில் தொகுதிகளை பங்கீடு செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிமுக தன்னுடைய 25 தொகுதிகளில், ஜி.கே.வாசனின் தமிழ்  மாநில காங்கிரஸுக்கு 1 தொகுதியையும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியையும், புதுச்சேரி தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கும் தொகுதிப்பங்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அதிமுக 22 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல் பாஜகவின் 15 தொகுதிகளில், பா.ம.க.,விற்கு 4 இடமும், தே.மு.தி.க.,விற்கு 3 இடமும் பங்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பாஜக 7 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாமகவும், தேமுதிகவும் அதிக இடங்கள் கோரினால், சிறிய கட்சிகளின் கூட்டணியை முறித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி அந்தந்த தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.

%d bloggers like this: