ஆண்கள் உடலுறவிற்கு முன் இதை கட்டாயம் செய்திருக்க வேண்டும்..! 

அறியாமை

நம்மில் பலருக்கு உடலுறவு பற்றிய புரிதல் சரியாக இல்லை என்பதே நிதர்சனம். ஆனால், இதில் மோசமான நிலை என்னவென்றால் அதற்கு முன் செய்து கொள்ள வேண்டிய எச்சரிக்கையான சில விஷயங்கள் பற்றி கூட தெரிவதில்லை. இப்படிப்பட்ட அறியாமை தான் உடலுறவுக்கு பின் நோய்களுடன் நம்மை அவதிப்பட வைக்கிறது.

100 வகை

இது பலருக்கும் அதிர்ச்சி தர கூடிய விஷயமாக இருக்கலாம். அதாவது, உடலுறவு வைத்து கொள்வதற்கு முன்னர் நாம் ஒரு சில எச்சரிக்கையான விஷயங்களை செய்யவில்லை என்றால் 100 விதமான பாலியல் ரீதியான நோய்கள் உடலில் உருவாகுமாம். இவை ஆண்களின் மூலமே பரவ கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள்!

இந்த வகை பால்வினை நோய்களுக்கு முழு காரணமும் ஆண்கள் தான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது, தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்னரே ஆண்கள் கட்டாயம் Human papillomavirus (HPV) என்கிற வைரஸை தடுக்கும் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டுமாம். இதை போடாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுறவின் மூலமாக வியாதிகள் விஸ்வரூபம் எடுக்கும்.

காரணம்!

இந்த வகை நோய்கள் ஆண்களின் பிறப்பிருப்பில் இருந்து பெண்களுக்கு பரவ கூடிய தன்மை வாய்ந்தவை. ஆண்களின் பிறப்புறுப்பின் மூலமாக பரவ கூடிய நோய்களின் எண்ணிக்கையே இதில் அதிகம். இந்த தடுப்பூசியை போடவில்லையெனில் நிச்சயம் பாதிப்புண்டு என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன.

ஆய்வு!

பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் நோய்களின் பற்றிய தகவல்கள் வெளி வந்துள்ளன. அதாவது, ஆண்கள் 9-26 வயதுக்குள் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.

இதனை போட்டு கொள்ளாத பலரும் இந்த வகை நோய்களால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதையே அறியாமல் உள்ளனர்.

பெண்களுக்கு!

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியை இந்த வகை பால்வினை நோய்கள் பாதிக்கும். கருப்பை புற்றுநோய், அந்தரங்க உறுப்பு புற்றுநோய், யோனி புற்றுநோய் போன்ற புற்றுநோய் அபாயங்கள் இதனால் பெண்களுக்கு ஏற்படும் என ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன.

ஆண்களுக்கு!

இந்த தடுப்பூசி போடாத ஆண்கள் உடலுறவில் ஈடுபடும்போது அவர்களின் ஆணுறுப்புக்கே பாதிப்பை இந்த HPV என்கிற வைரஸ் ஏற்படுத்தும்.

நாம் நினைப்பதை விட HPV வைரஸ் மிக மோசமான தன்மை கொண்டது. ஒரு முறை இதனால் தொற்றுகள் உண்டாகினால் மீண்டும் இதில் இருந்து உங்களை காப்பது கடினமே.

மற்ற உறுப்புகள்

பிறப்புறுப்பில் மட்டுமே இந்த நோய்கள் பரவாது. ஓரல் செக்ஸ் வைத்து கொள்வதாலும் இதன் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக தொண்டை, வாய், நாக்கு போன்ற உறுப்புகளில் இந்த நோய் தொற்று பரவ தொடங்கும். முடிவில் மரணம் கூட நிகழலாம்.

ஜாக்கிரதை!

ஆதலால், மரணத்தில் இருந்து உங்களை காத்து கொள்ள நிச்சயம் HPV தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள். ஆண்கள் இதை ஒரு போதும் அசாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.

இது உங்களை சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. உங்களின் துணையையும் இந்த வைரஸ் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

%d bloggers like this: