காரம், சூடு வேண்டாமே!

காரமான உணவுகளிலிருக்கும் `கேப்சாய்சின்’ (Capsaicin) என்ற மூலக்கூறு, வயிறு, குடல், மூச்சுக்குழாய், வாய் போன்ற பகுதிகளில் உபாதைகளை ஏற்படுத்தும். தவிர, அந்தப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரித்து, எரிச்சலை ஏற்படுத்தும். இது தொடக்கநிலைதான். தொடர்ந்து இதேபோல் சாப்பிட்டுவந்தால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஏற்கெனவே, நெஞ்செரிச்சல் அல்லது அல்சர் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, பாதிப்புகள் தீவிரமடையலாம். 

 

காரமான உணவுகளில், அமிலங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், ‘உணவு எதுக்களித்தல்’ பிரச்னை வரலாம். தொடர்ந்து காரமான உணவுகளைச் சாப்பிட்டு வருபவர்களுக்குப் பசியின்மை ஏற்படலாம். காலப்போக்கில் இரைப்பை அழற்சியும் சேர்ந்துகொள்ளும். முதன்முறையாகக் காரமான உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற்று உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

காரமான உணவுகளைப்போலவே அதிக சூடான உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. சுடச்சுட உணவு உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள்கூட டீ, காபியைச் சூடாகக் குடிப்பார்கள். எந்த உணவையும், வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடுவதே சரி. அதிகமாக வறுத்த உணவுகளிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். காரம் குறைவான, வெதுவெதுப்பான, வேகவைத்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கமே  ஆரோக்கியமானது.’’

%d bloggers like this: