இந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் இரகசியம் என்ன தெரியுமா?

பூமியில் ஆயிர கணக்கான பூக்கள் உள்ளது. சில வகை பூக்கள் ரசிப்பதற்கு மட்டுமே. சில வகை பூக்கள் சூடுவதற்கு மட்டுமே. ஆனால், ஒரு சில பூக்கள் மட்டும் தான் இந்த பூமியில் உள்ள மற்ற ஜீவ ராசிகளுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. உண்மையிலே சில பூவுக்குள் ஆயிரம் ஆயிரம் இரகசியங்கள் இன்றும் ஒளிந்து கொ

image

ண்டு தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட மகிமைகள் நிறைந்த பூக்களின் வரிசையில் தான் இந்த பூவும் சேர்ந்துள்ளது. பலவித மருத்துவ குணங்கள் இந்த பூவில் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கும் இது தீர்வாக உள்ளது. இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பூவின் பெயரையும் இதனால் நமக்கு கிடைக்கும் ஈடற்ற நன்மைகளையும் இனி அறிந்து கொள்வோம்.

என்ன பூ?

மற்ற பூக்களை போலவே பார்ப்பதற்கு இந்த பூவும் ரம்மியமாக இருக்கும். இதன் இதழ்கள் வெளிர்ந்த வெண்மை நிறத்தை கொண்டிருக்கும். உட்புறத்தில் இளம் மஞ்சளாக இது காணப்படும். இதன் பெயர் தான் நாகப்பூ. இதனை கோவில்களில் நாம் பெரும்பாலும் பார்க்க இயலும்.

மலச்சிக்கல்

மருத்துவ குணம் நிறைந்த பூவை வைத்து தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தி விடலாம். மலம் கழிக்கும் போது இரத்தம் ஏற்பட்டால் அதனையும் இந்த பூவை கொண்டு குணப்படுத்தலாம். இதற்கு இந்த பூவை 1 கிராம் அளவிற்கு எடுத்து, அரைத்து கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம்.

பாம்பு கடி

பாம்பு கடி ஏற்பட்டால் இந்த பூவின் வேரை வைத்தே விஷத்தை முன்பெல்லாம் முறித்து விடுவர். இதில் உள்ள மருத்துவ குணம் பாம்பின் விஷத்தை உடலில் இருந்து நீக்கும் தன்மை கொண்டதாம். மேலும், சருமத்தில் ஏற்படுகின்ற அரிப்பு, சொரி போன்றவற்றிற்கும் இது தீர்வை தரும்.

குடல் புழு

செரிமான பிரச்சினை கொண்டோருக்கு இந்த நாகப்பூ சிறந்த மருந்தாக செயல்படும். இதை வைத்தே அஜீரண கோளாற்றை குணப்படுத்தி விடலாம். அத்துடன் குடலில் சேர்ந்துள்ள புழுக்களை கொன்று வெளியேற்றி விடும் தன்மை இதற்குண்டு.

சுவாச கோளாறுகள்

சுவாச பிரச்சினை இருந்தால் இந்த பூ உங்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். சளி தொல்லை, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை தீர்வுக்கு இது கொண்டு வரும். அத்துடன் ஆஸ்துமா பிரச்சினைக்கும் இது வழி வகுக்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகளை இந்த பூ குறைத்து விடும். மேலும், அதிக அளவில் உதிர போக்கு ஏற்பட்டால் அதை குறைக்கவும் நாகப்பூ போதும். கூடவே பெண்களுக்கான சிலபல மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை இது தீர்க்கவும் உதவும்.

வாத நோய்

வாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் இந்த பூ பயன்படும். இதில் உள்ள மருத்துவ தன்மை வாத நோய்களை மிக எளிதில் தீர்த்து விடும். அத்துடன் உடல் வலிமையையும் இது அதிகரிக்கும் தன்மை கொண்டது.

மன அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் சிறந்த தீர்வாக இந்த பூ இருக்கும். மன அழுத்தத்தை குறைத்து இலகுவான நிலையை இது உங்களுக்கு ஏற்படுத்தும்.

%d bloggers like this: