* உணவு உப்பு அபாயமானதா?
உப்பு, அளவுக்கு அதிகமாகும் போதும் பல பிரச்னை ஏற்படுகிறது. உடலில் உப்பு அதிகரித்தால் அதிகமான தண்ணீரை உடல் சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை, சிறுநீரக கற்கள் மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமான உப்பு, ரத்த குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு தடையை ஏற்படுத்தும்.
இந்த அடைப்பு நீடிக்கும் போது இருதய நோய்கள், மாரடைப்பு ஏற்படலாம். உப்பு, இருதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது. எனவே தினமும் உப்பு அளவில் கவனம் அவசியம். அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதாலும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல்கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப்பட்டு வரும் உணவுகளிலும் அவற்றை கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன்படுத்தப்படுகிறது. பாக்கெட் பாப்கார்ன், உறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றிலும் உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுவதற்கு காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்பு பொருள் என்பதால்தான்.
* உப்பினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பது எப்படி?
உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் வகையில் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காரசாரமான நொறுக்கு தீனிகள், ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* உப்புக்கு மாற்று உப்பு உண்டா?
உயிர் காக்கும் இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ‘இமாலயன் ராக் சால்ட்’ என்பார்கள். சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாம். இந்துப்பு கடினமற்ற உடையும் தன்மைமிக்கதாகவும், சுவையாகவும் உள்ளது. இந்துப்பு பாறைகளிலிருந்து கிடைக்கும். சற்றே மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. மனிதருக்கு நலம் தரும் 80 வகையான கனிமத்தாதுக்களை கொண்டுள்ளது.
அனைத்து மனிதர்களும் எல்லா நாட்களிலும் .ணவில் பயன்படுத்த ஏற்ற வகையில், இந்துப்பில் இயற்கையான நன்மைகள், இயல்பாகவே அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக இந்துப்பை பயன்படுத்தலாம். பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பு, நல்ல நீர் மற்றும் இளநீரில் ஊறவைத்து, பதப்படுத்தப்பட்ட பிறகே நமக்கு பயன்படுத்தக் கிடைக்கிறது.
* இந்துப்பின் பலன்கள் யாவை?
கண்களை காக்கும் ஆற்றல் உண்டு. தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். குளிக்கும் முன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்துவர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். டயாலிசிஸ் செய்யவேண்டிய நிலையில் உள்ளவர்கள் அல்லது சிறுநீரகத்தையே மாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தன்னம்பிக்கை முயற்சியாக, இரண்டு வாரம், இந்துப்பு கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டுவர, ரத்தத்தில் உள்ள குறைப்பட்ட தாதுக்கள் எல்லாம் இயல்பான அளவில் சரியாகி, சீறுநீரக இயக்கங்கள் சீராகி, உடல் நலம் பெறுவர். உடல் வேதனையும் நீங்கிவிடும். இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். எளிதில் செரிமானமாகும் தினுள்ளது.
மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது. பெரும்பாலும் உப்புதான் உடலில் பித்தத்தை அதிகரித்த, தலைசுற்றல், மயக்கம், பித்த வாந்தி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பித்த நோய்களை உண்டாக்கும். ஆனால் இந்துப்பை பயன்படுத்தும்போது அது பித்தத்தை மட்டுமின்றி கபத்தையும் சமன்செய்து, சளி, இருமல், சைனஸ் வராமல் காக்கின்றன. ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றன.
கண் பார்வை, இதயத்தை பாதுகாக்கிறது. உடலில் நீர் சத்தையும் தக்கவைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நல்ல உறக்கத்தையும் உண்டாக்குகிறது. இந்த உப்பை கொண்டு வாய் கொப்பளிக்கும் போது பல் ஈறுகள் பிரச்னை இருந்தாலும், வாய் புண் இருந்தாலும் குணமடையும்.
– டாக்டர் மதுமிதா
ஓமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.
Kindly request please don’t send mail ….stop..