அடுத்த திட்டம் 10,000; எடப்பாடியின் டெவலெப் டெக்னாலஜி!!

வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவில் ஆட்சிபுரியும் எந்த மாநில அரசுகளும் அறிவிக்காத ஒரு திட்டம் மக்களுக்கு பணம் கொடுப்பது. மக்களின் வறுமை நிலைய கூறி வறட்சி என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 2000 என தமிழக மக்களுக்கு குறிப்பாக 60 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததோடு, அவரவர் வங்கி கணக்கில் இம்மாத இறுதிக்குள்ளேயே செலுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக  அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மக்களுக்கு பணம் கொடுக்கும் இந்த செயலை எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கண்டிப்பதோடு, இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கை என விமர்சனம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக  நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதையெல்லாம் கண்டு அசராத, அஞ்சாத முதல்வர் எடப்பாடி மற்றொரு டெவெலப் டெக்னாலஜியாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 10000 கொடுக்க போகிறார் என்று அதிமுகவின் கொங்கு மண்டல முன்னாள் மா.செ ஒருவர் நம்மிடம் கூறினார்.

அது என்ன டெக்னாலஜி என்று அவரிடம் கேட்டதற்கு, அந்த ரகசியத்தை நம்மிடம் உடைத்தார். அவர் கூறியதாவது,

வங்கிகள் மூலம் ஒரு குடும்பத்திற்கு கடனாக  10000 கொடுப்பதுதான். இந்த கடன் தொகையில் அரசு 10 சதவிகிதம் மானியம் தரும். மீதி தொகையை நீண்ட கால கடனாக பயனாளிகள் திருப்பி செலுத்த வேண்டும். குறிப்பாக ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் 300 ரூபாய் என்ற அளவுகோல்தான். இந்த கடனை கொடுக்கும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்ல. மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள். இந்த திட்டத்தை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. ஒருவேளை  இந்த ரகசியம் அம்பலபட்டுவிட்டால் இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு குடும்பத்திற்கு 10000 எந்த அடிப்படையில் கொடுக்கலாம் என்று தீவிரமாக அதிகாரிகளோடு தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர். 

மக்களுக்கு வங்கியின் மூலம் கொடுக்கப்படும் தொகை மாநில அரசின் சிறப்பு நிதியிலிருந்தோ அல்லது மத்திய அரசிடம் பெற்றோ வங்கிகளுக்கு வழங்கப்படலாம் என அவர் தெரிவித்தார். 

60 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படும் 2000 ரூபாய், அடுத்ததாக  வழங்கப்படும் ரூபாய் 10000 எல்லாம் வாக்கு வேட்டைக்காகவே. இந்த நவீன டெக்னாலஜியை  செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய பாஜக அரசும், அக்கட்சியின் தலைவர்களும் பாராட்டவே செய்வார்கள். வங்கிகளில் கடன் வாங்கிய வாக்காளர்கள் ஓரிரு மாதங்களில் தேர்தல் முடிந்த பிறகு திருப்பி செலுத்தவில்லை என்றால் அந்த வங்கிகள் கடன் வாங்கிய வாக்காளர்களின் கழுத்தை நெரிக்கப்போவது உறுதி.

%d bloggers like this: