ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு இந்திரியம் வெளியாகுமா?

பொதுவாக ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இது மிக சாதாரணமாக இயல்பான நிகழ்வு தான். இதற்குப் பல காரணங்களும் சொல்லப் படுகின்றன. அதேபோல பெண்களுக்கு தூக்கத்தில் எந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும். பெண்களுக்கும் தூக்கத்தில் இந்திரியம் வெளியாகுமா? அப்படி வெளியாவதற்கு என்ன மாதிரியான காரணங்கள் இருக்கின்றன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விந்து வெளியேற்றம்

பொதுவாக ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் நிகழும். அதற்குக் காரணம். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகி்ன்றன. ஏனென்றால் ஆண்கள் நிறைய நேரங்கள் உடலுறவு குறித்த சிந்தனைகளில் மூழ்கிப் போயிருப்பது, கனவுகள் காண்பது, பலான புத்தகங்கள் படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து கிளர்ச்சியாகப் பேசுவது, சுய இன்பம் இப்படி நிறைய காரணங்களால் ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேறுதல் உண்டு. அதேபோல பெண்களுக்கு இந்த விஷயம் நடக்குமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. இதுபற்றித் தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பெண்கள் தூங்கும்போது

ஆண்களுக்கு விந்து வெளியேறுவது போல பெண்களுக்கும் பிறப்புறுப்பில் திரவம் வெளியேறும். அதை இந்திரியம் என்று சொல்வார்கள். இந்த இந்திரியமானது ஆண்களுக்கு தூக்கத்தில் உச்ச நிலையின் போது வெளியேறுவது போலவே பெண்களுக்கும் உண்டாகுமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. நிறைய பேர் இதை நம்புவதில்லை. ஆனால் அதுதான் உண்மை என்று நிறைய ஆய்வுகள் சொல்கின்றன.

என்ன உள்ளடங்கியிருக்கும்?

ஆண்களின் விந்தணுவில் உள்ள உயிரணுக்களைத் தவிர மற்ற எல்லா பொருள்களும் பெண்களில் இருந்து வெளியேறும் திரவத்தில் உண்டு. குளுக்கோஸ் மற்றும் புரோஸ்டேடிக் ஆசிட் ஆகியவையும் நிரம்பியிருக்கின்றன.

எப்போது வெளியேறும்?

ஆண்களைப் போலவே பெண்களும் உச்ச கட்ட இன்பத்தை அடைகின்ற பொழுது, இந்த இந்திரிய திரவமானது வெளியேற ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு ஆண்களைப் போன்று விந்து வெளியேறுவதற்கான குழாய் போன்ற அமைப்பு இல்லாததால் அந்த திரவம் பிறப்புறுப்புச் சுவர்களில் வடிந்து வெளியேறுகிறது.

ஜி ஸ்பாட்

இப்படி உச்சக்கட்டத்தை அடைந்து திரவம் வெளியேற்றுதலை எல்லா பெண்களும் உணர்வதில்லையாம். 30 சதவீதம் பெண்கள் மட்டுமே உச்ச கட்ட இன்பத்தையும் இந்திரியம் வெளியேறுதலையும் உணர்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஏன் தாமதமாகிறது?

ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுகிறார்கள். ஆனால் ஆண்களை விட பெண்கள் அவ்வளவு எளிதாக உச்சமடைவதில்லை. இதற்குக் காரணம் என்ன என்று நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் ஆதிகாலம் தொட்டே வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆண்களைப் போல்

ஆண்களுக்கு விந்து வெளியேறுவது தூக்கத்தில் தவிர மற்ற நேரங்களில் உணர முடியும். ஏனென்றால் அவர்கள் உச்சகட்ட இன்பம் அடைவதை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி கிடையாது. பெண்கள் இரவு நேரத்தில் தூக்கத்தில் மட்டுமல்ல, நனவு நேரத்திலும் திரவம் வெளியேறுவதை அவ்வளவாக உணர்ந்திருப்பதில்லை.

%d bloggers like this: