இந்தா பிடி 12.. ஆக மிச்சம் 28.. அதிமுகவில் சீட் ஸ்டாக் கையிருப்பு இம்புட்டுதான்!

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக அதிமுக வசம் 20 முதல் 23 தொகுதிகள் வரை இருக்கும் என்றே தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிமுகவில் சூடு பிடித்துள்ளன. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம் என்ற ஜெயக்குமார் கருத்துக்கேற்ப லேட்டாக பிக்கப் ஆனாலும் தற்போது எல்லாம் முடிந்து ஃபுல் ஸ்பீடில் அதிமுக செல்கிறது.

இன்று காலை அதிமுக – பாமக தொகுதி என்பது உறுதியானது. இதையடுத்து நட்சத்திர ஹோட்டலில் பாஜகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சீக்கிரமே பேச்சுவார்த்தை நடத்தினாலும் ராகு காலம் முடியும் வரை காத்திருந்துவிட்டு தங்கள் முடிவுகளை அறிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. அதில் 7 தொகுதிகள் பாமகவுக்கும் 5 தொகுதிகள் பாஜகவுக்கும் சென்றுவிட்டது. 40-இல் 12 போனால் மீதம் 28 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன.

இந்த 28-இல் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். ஏசி சண்முகம், பச்சமுத்துவின் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்படும். மீதம் 22 தொகுதிகள் இருக்கும்.

இந்த 22-இல் புதுவையில் அதிமுகவே போட்டியிடலாம். இல்லாவிட்டால் அந்த ஒரு தொகுதியை என் ஆர் காங்கிரஸுக்கு ஒதுக்கலாம் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தபோது புதுவை சட்டசபை தேர்தலின் போது கூட்டணி வைத்தபோது கொடுத்த வாக்குறுதியை என் ஆர் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை என்பதால் அக்கட்சியுடன் அதிருப்தி நிலவுகிறது. எனினும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யலாம் என தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் அதிமுக 20 முதல் 22 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.

%d bloggers like this: