ஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா?

ஆராய்ச்சி!

ஆயுட்காலத்தை நீடிக்க வைக்க பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனித இனத்தின் மூலதனமாக உள்ளது.

சாப்பிடும் உணவு தான் ஆயுளை அதிகரிப்பதில் முக்கிய இடத்தில் இருப்பதாக இந்த ஆய்வுகள் சொல்கின்றன. கூடவே உணவின் அளவு மிக அவசியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த கலோரிகள்

காலை நேரத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நம் ஆயுளை முற்றிலுமாக பாதித்து விடும்.

குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எப்போதுமே சேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என இந்த ஆய்வுகளின் முடிவு சொல்கிறது.

காரமான உணவுகள்

சாப்பிட கூடிய உணவில் காரத்தன்மை மிகவும் முக்கியமாகும். தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். இது நம் முன்னோர்களே பல ஆயிரத்திற்கு முன் குறிப்பிட்டுள்ள தகவலாகும். இதை தான் இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.

சீனர்கள்

அதிக காலம் வாழும் மக்கள் சீனாவில் ரொம்பவே உள்ளனர். இவர்களின் உணவு பழக்கம் மற்றும் அன்றாட செயல்களை ஆய்வு செய்ததில் சில ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன.

அதாவது, இவர்கள் வாரத்திற்கு 7 நாட்களும் காரசார உணவுகளை சாப்பிடுவார்களாம். இது தான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கான இரகசியம் என குறிப்பிடுகின்றனர்.

மீன்

கேரட்டினோய்ட்ஸ் அதிகம் மீன்களில் உள்ளதால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வைக்கும். குறிப்பாக சல்மான், டூனா முதலிய மீன்கள் இதில் முதல் இடத்தில் உள்ளதாம். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மீனை உணவில் சேர்த்து கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

குறைந்த உணவு

எப்போதுமே உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு நல்லது தான். உணவுகளை பற்றிய ஆய்வுகளும் இதை தான் சொல்கின்றன.

அதாவது சாப்பிட கூடிய உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் நோய்களுக்கான வாய்ப்பு மிக குறைவு,. இதுவே உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வழி வகுக்கும்.

செல்களின் வளர்ச்சி

ஒவ்வொரு உயிரினமும் வளர்ச்சி அடைய மிக முக்கியமாக தேவைப்படுவது செல்கள் தான். செல்களின் வளர்ச்சி சரிவர இல்லையெனில் அவை மிக விரைவிலே சிதைவடைய தொடங்கும்.

இதே நிலை தொடர்ந்தால் எதிர்ப்பு சக்தி குறைபாடு உண்டாகி வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றானாக வர தொடங்கும்.

பருப்பு வகைகள்

தினமும் 3 பாதாம் பருப்பு சாப்பிட்டு வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலம் இளமையாக இருக்க இது போன்ற பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும். இவை இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க 20% வழி வகுக்குகிறது.

உறுப்புகள் செயலிழத்தல்

நமது உடல் தேவையையும், உறுப்புகளின் தேவையையும் நன்றாக அறிந்து உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடை கூடுதல், கலோரிகள் அதிகரித்தல், சர்க்கரை நோய், இதய பாதிப்பு முதலிய பல்வேறு அபாயங்கள் ஏற்படுமாம். இதை தடக்க மேற்சொன்ன குறிப்புகளை கடைபிடித்து சாப்பிட்டு வந்தாலே நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.

%d bloggers like this: