மதில் மேல் பூனை! தேமுதிகவுக்காக அதிமுக, திமுக வெய்ட்டிங்!!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பால், கூட்டணி பேச்சு வார்த்தையில் கடந்த சில நாட்களாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை சொல்லப்பட்ட நிலையில், தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, உள்ளிட்ட மேலும் சில கட்சிகளுக்கு, இன்னும் அழைப்பு விடுக்கப்பட வில்லை.

அதிமுக கூட்டணியில் தேமுதிக வந்த பின்னர்தான், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நிலை உள்ளது. தேமுதிக கூட்டணிக்கு வரும் என்று மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்னார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட பலரும் நம்பிக்கையுடன்  வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்..

இதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை சொல்லப்பட்ட நிலையில், மதிமுக, விசிக, இடதுசாரிகள், மமக, கொங்கு மக்கள் கட்சி ஆகியவற்றுடன் ஒரு சுற்று பேச்சு வார்த்தையுடன், கூட்டணி அப்படியே நிற்கிறது. 

தேமுதிக தங்கள் அணிக்கு வந்தால் தலா ஒரு தொகுதி, வராவிட்டால் தலா இரு தொகுதி என்ற அளவுக்கு தோழமைக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை பாதியில் நிற்கிறது.

ஆக, விஜயகாந்தின் கூட்டணி அறிவிப்புக்குப் பிறகே அரசியல் களம் சூடு பிடிக்கும் என்ற நிலையில், மதில்மேல் பூனையாக தேமுதிக நிலை உள்ளது.

மதில் மேல் பூனையோ, பூனை மேல் மதிலோ, சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க என்று,  சிறு கட்சிகள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

%d bloggers like this: