வாரத்தில் இத்தனை தக்காளிக்கு மேல் சாப்பிட்டால் அது உடம்பில் விஷமாக மாறுமாம்… பார்த்து சாப்பிடுங்க

தக்காளியின் மார்க்கெட்

தக்காளியை சொலனம் லிகோபெர்சிகம் என்றும் அழைப்பார்கள். வருடம் முழுவதும் சூப்பர் மார்கெட் மற்றும் விவசாய சந்தைகளில் கிடைக்கும் இந்த பழம் உலகம் முழுவதும் விளைவிக்கப்படும் ஒரு பழ வகையாகும்.

தக்காளி பலவேறு அளவுகளில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. இதனை பல வழிகளில் சாப்பிட முடியும்.

சமைக்காமல் பச்சையாக உட்கொள்ள முடியும். சாலட், பிஸ்சா, பாஸ்தா, பழச்சாறு, சாம்பார், சட்னி என்று எந்த விதத்திலும் தக்காளியை உட்கொள்ள முடியும்.

இத்தனை எளிதில் கிடைக்கக்கூடிய, மிகவும் பிரபலமான ஒரு பழத்தை உட்கொள்வதால் உடலுக்கு நன்மையா? இதனை எவ்வளவு உட்கொள்ளலாம்? இந்த கேள்விகளுக்கு இந்த பதிவில் உங்களுக்கு விடை கிடைக்கும். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்ன இருக்கிறது?

லைகொபீன் என்னும் அன்டி ஆக்சிடென்ட்டின் முக்கிய ஆதாரமாக விளங்குவது தக்காளி. தக்காளிக்கு அதன் ஒளிமயமான நிறம் உண்டாவதற்கு காரணம் இந்த லைகோபீன் ஆகும். லைகொபீன் போன்ற இதர தாவர மூலக் கூறுகளான பீடா கரோடின், நரிஜெனின், க்லோரோஜனிக் அமிலம் போன்றவையும் தக்காளியில் உள்ளன.

ஊட்டச்சத்துக்கள்

பீட்டா கரோட்டின் என்பது ஒரு சிவப்பு ஆரஞ்சு நிறமி ஆகும், இது தாவரங்களுக்கு வண்ணத்தை சேர்க்கிறது மற்றும் வைட்டமின் A ஆக மாற்றப்படுகிறது, இது ஆரோக்கியமான தோல் மற்றும் குறைந்த அளவிலான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நன்மை சேர்க்கிறது. பீட்டா கரோடின் அதிக அளவு இருப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், போலேட், வைட்டமின் கே போன்ற இதர ஊட்டச்சத்துகள் உள்ளன. தக்காளியில் காணப்படும் வைட்டமின் அளவு, ஒவ்வொரு செடிக்கும் மாறுபடும். ஆனால், ஒரு சராசரி அளவு தக்காளியில் தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் சி அளவில் 28% பூர்த்தியாகிறது.

நன்மைகள் என்ன?

தக்காளியில் பல்வேறு ஊட்டச்சத்துகள் இருப்பதால், இதனை உட்கொள்பவருக்கு பலவித நன்மைகளை வாரி வழங்குகிறது.

தக்காளியில் விதம் மற்றும் அளவைப் பொறுத்து அவற்றில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமங்களில் அளவு மாறுபடுவதால் அதன் நன்மைகள் வேறுபடுவதாக இன்றைய மருத்துவ செய்திகள் விவரிக்கின்றன. உதாரணத்திற்கு , செர்ரி தக்காளியில் வழக்கமான தக்காளியை விட பீட்டா கரோடின் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

வைட்டமின் சி

தக்காளி வைட்டமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குவதால், புற்று நோயை உண்டாக்கும் ப்ரீ ரேடிகல் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிடம் போராடி அதன் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள அதிக அளவு பீட்டா கரோடின் காரணமாக ஆண்மை சுரப்பி புற்று நோய் எனப்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயில் கட்டி வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக அறியப்படுகிறது.

புற்றுநோய் தடுக்க

குறிப்பிட்ட சிலவகை புற்றுநோயைத் தடுக்க உதவுவதோடு மட்டுமில்லாமல், தக்காளியில் உள்ள உயர் வைடமின் சத்து காரணமாக ஆரோக்கியமான இரத்த அழுத்த நிலையை நிர்வகிக்கவும், இதய ஆரோக்கியத்திற்கு உதவவும், மலச்சிக்கல் அற்ற சீரான குடல் இயக்கத்திற்கு நன்மை புரியவும் தக்காளி பயன்படுகிறது. மேலும் கண்களைப் பாதுகாத்து, கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும் நோக்கத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியமான கூந்தல் மற்றும் நக வளர்ச்சிக்கும் தக்காளி பயன்படுகிறது.

கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?

கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கு நரம்பு குழாய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தக்காளியில் உள்ள போலேட் சத்து துணை நிற்கிறது. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் போலேட் சத்து அதிகரிக்க மாத்திரைகள் பயன்படுத்துவார்கள். ஆனால் தக்காளி, போலேட் சத்தின் இயற்கை ஆதாரமாக விளங்குகிறது.

எப்படி சாப்பிடணும்?

உங்கள் உணவு அட்டவணையில் இன்னும் சிறிதளவு லைகோபீன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கேனில் விற்கப்படும் தக்காளி உணவுகளை வாங்கி பயன்படுத்தலாம். பிரெஷ் தக்காளியை விட, இந்த பதப்படுத்திய தக்காளியில் இந்த கூறு அதிகம் உறிஞ்சப்பட்டிருக்கும். இதேபோல், தக்காளி விழுது, தக்காளி சாஸ், சூப், பாஸ்தா சாஸ் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

ஆன்டி ஆக்சிடண்ட்

தக்காளியை பழமாக அப்படியே சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், பளிச்சென்று இருக்கும் சிவப்பு நிறத்தைக் கொண்ட தக்காளியை வாங்கி சுவைத்து மகிழலாம். காரணம், இந்த தக்காளியில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் இருக்கும்.

ஃபிரிட்ஜ்

சூரிய வெளிச்சத்தில் நேரடியாக வைக்காமல், அறையின் வெப்ப நிலையில் வைக்கப்படும் போது அதன் நிறம் மாறாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்து தக்காளியை பயன்படுத்துவதால் அதன் வாசனை மற்றும் சுவை கெட்டு விடும்.

ஆலிவ் ஆயில்

தக்காளியை சமைத்து சாப்பிடுவதால் லைகோபீன் வெளியேற உதவும், மேலும் தக்காளியில் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து உட்கொள்வதால் உடலில் எளிதாக உறிஞ்சப்படும்.

ஒரு வாரத்திற்கு எத்தனை?

தினமும் ஒரு மிதமான அளவு தக்காளி அல்லது 7 செர்ரி தக்காளியை உங்கள் உணவின் பகுதியாக எடுத்துக் கொள்ளும்படி NHS பரிந்துரைக்கிறது. தினமும் ஒரு பகுதி தக்காளி சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது. மேலும் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், தக்காளி குறைந்த கலோரி எண்ணிக்கை கொண்ட ஒரு பழம், மேலும் இதில் நீர்ச்சத்து மிகவும் அதிகம். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற ஒரு பழமொழி உள்ளது, அதனையும் நினைவில் கொள்வது அவசியம். இதனைப் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

பின் விளைவுகள்

தக்காளியை அதிகம் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமா?

தக்காளியில் பல அற்புத நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக இதனை எடுத்துக் கொள்வதால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகலாம்.

செரிமானக் கோளாறுகள்

அதில் ஒரு குறிப்பிட்ட உடல் உபாதை, எதுக்கலித்தல். தக்காளியில் மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. ஆகவே இதனை அதிகமாக உட்கொள்வதால், வயிற்றில் அதிக அமில சுரப்பு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமான தொந்தரவு, இரைப்பை குடல் அழற்சி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், அதிக தக்காளி சேர்த்துக் கொள்வது தவிர்க்க பட வேண்டியதாகும்.

சிறுநீரகக் கற்கள்

அதிக அளவு தக்காளி சேர்ப்பதால் சிறுநீரக கற்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கும். இதற்குக் காரணம் தக்காளியில் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் அதிகம் இருப்பதால், இவற்றை உடல் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு, உடலில் படியத் தொடங்கி, சிறுநீரக கற்களாக மாற்றம் பெறுகின்றன.

வயிற்றுப்போக்கு

லைகோபீன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தீமை உண்டாகிறது. லைகோபீனோடேர்மியா மற்றும் சரும நிறமாற்றம் ஆகியவை உண்டாகின்றன. பொதுவாக லைகோபீன் உடலுக்கு நன்மை செய்கிறது. ஆனால், அதிக அளவு லைகோபீன் தீங்கு விளைவிக்கிறது. ஒரு நாளில் 22 மிகி அளவு லைகோபீன் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் இரண்டு ஸ்பூன் தக்காளி ப்யுரீயில் 27மிகி அளவு உள்ளது.

அதிக அளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதால், வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.

வழக்குகள்

பல ஆண்டு காலமாக, சல்மோனெல்லா தொடர்பான பல வழக்குகளில் தக்காளி தொடர்பு பட்டிருக்கின்றன, மேலும் 2006 ஆம் ஆண்டில் 18 அமெரிக்க மாநிலங்களில் 172 சால்மோனெல்லா தொடர்பான நோய்களுக்கு காரணமாக பிற உணவுகள் இருந்தாலும், குறிப்பாக தக்காளி இருப்பதாகக் கருதப்படுகிறது, .

%d bloggers like this: