இன்று மைத்ர முகூர்த்தம் – 2019 : கடனை திருப்பி கொடுங்க இனி வாங்கவே மாட்டீங்க

கடன் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி கொடுத்து விட்டால் முழுகடனையும் விரைவில் அடைக்க இயலும். அந்த குறிப்பிட்ட நேரம் என்பது “மைத்ர முகூர்த்தம்”. வீடு கட்ட வாங்கிய கடன், வண்டிக்கு வாங்கிய கைமாத்து, நகையை அடகு வைத்து மீட்க முடியாத நிலை என்று கடன் பிரச்சினையில் பலரும் சிக்கித்தவிக்கின்றனர். கடனில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான்

ஆசைப்படுகின்றனர். ஆனால் இயலாத காரியமாகிறது. லோன் வேண்டுமா லோன் என்று கூவி கூவி கேட்டு கடனாளியாக்கி விடுகின்றனர். கடனை அடைப்பதற்காகவே அமைந்துள்ளது இன்றைய மைத்ர முகூர்த்தம் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை உள்ளது. இன்று நீங்கள் கடன் வாங்கியவரிடம் உங்கள் கடனில் ஒரு பகுதியைக் கொடுங்கள். பிறகு மளமளவென கடன் மொத்தத்தையும் அடைப்பீர்கள்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

இன்றைய தினம் அனைத்தும் கூடி வந்துள்ளது. மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

ஜாதக அமைப்பின்படி குரு மகரத்தில் நீசமாகி விரயம் அடைந்தாலும், 6ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவை சனி பார்த்தாலும் அடைக்கமுடியாதவாறு கடன் அழுத்தும். செவ்வாய் தசையில் சுய புக்தி, சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கும்போது, பெண்கள் மூலமாக கடன் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். குரு தசை நடக்கும்போது கேது, செவ்வாய் மற்றும் ராகு புக்தியில் கடன் சுமை வரக்கூடும். சனி தசை- கேது புக்தியில், மகன் மூலமாகக் கடன் தொல்லை ஏற்படும். ராகு தசை நடக்கும்போது சனி, சூரியன் மற்றும் செவ்வாய் புக்தியில் கடன் தொல்லை, சுற்றி உள்ள நபர்களால் ஏற்படும். புதன் தசை நடக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். நாம் ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த நண்பர் அதை ஒழுங்காகக் கட்டாமல் விட்டுவிட, நாம் கட்டவேண்டிய நிலை ஏற்படும். கேது தசை- சந்திர புக்தியில் நகை மூலமாகக் கடன் வரும். சுக்கிர தசை- சூரிய புக்தியில் வங்கிக் கடனை கூட அடைக்க இயலாத நிலை ஏற்படும். சனி புக்தியில் மனைவி, மகனுக்கான வைத்தியச் செலவுகளாலும், கேது புக்தியில் வண்டிகள், எருதுகள், பசுக்கள் வாங்குவதாலும் கடன் உண்டாகும். சிறிய கடன்கள் கூட அடைபடாமல், வட்டி அதிகமாகி வாட்டக்கூடும்.

கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்

மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். தோரண கணபதியை வணங்கி விட்டு இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும். வாஸ்து பூஜைக்கு ராகுகாலம், எமகண்டம் ஆகியவை விதி விலக்கு என்பதுபோல இதற்கும் விதிவிலக்கு உள்ளது.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

2019ஆம் ஆண்டில் மைத்ர முகூர்த்த நாட்கள்

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் மைத்ர முகூர்த்தம் அமைவது மிகவும் சிறப்பானது. செவ்வாய்க்கிழமை அல்லாத அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும்.

கடன் தீர்க்க நல்ல நாட்கள்

11.2.2019 திங்கள் காலை 10.35 முதல் மதியம் 12.35 வரை கடன் திரும்ப தரலாம்.

26.2.2019 செவ்வாய் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை திரும்ப தரலாம்.

10.3.2019 ஞாயிறு காலை 8.49 முதல் 10.49 வரையும் கடன் அடைக்கலாம்

25.3.2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை கடன் அடைக்கலாம்

07.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை கடன் அடைக்கலாம்.

சனி பகவானில் அருள் தேவை

எந்த காரணத்திற்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. பாவத்பாவபடி சனைச்சரனின் கும்பராசி கால புருஷனுக்கு ஆறுக்கு ஆறாக இருப்பதால் அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். மேலும் சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும்.

லட்சுமி நரசிம்மர் வழிபாடு

ருணம் எனில் கடன் என்று பொருள். கடன் தீர்க்க காலபைரவரை வணங்கலாம். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

%d bloggers like this: