உங்களுக்கு கொழுப்புசத்து அதிகமாக உள்ளதா? அப்போ இந்த அபாயம் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்!

மூளை

அதிக செயல்திறன் கொண்ட உறுப்புகளில் நமது மூளை தான் முக்கிய இடத்தில் உள்ளது. நமது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என கட்டளை இடுவதே மூளை தான். மூளையின் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டால் நாம் கோமா நிலைக்கே சென்று விடுவோம்.

கொழுப்பு உணவுகள்

சாப்பிட கூடிய உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருப்பது பலர் அறிந்திராத ஒன்று. கொஞ்சம் கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் அப்படி என்ன மோசமான பாதிப்பு உண்டாகும் என பலர் கேட்பது சரிதான். ஆனால், கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் மூளை பல்வேறு மாற்றங்களை அடைந்திடும்.

எவ்வளவு கொழுப்பு?

கொழுப்பு நமது உடலில் சரிவிகிதமாக இருந்தால் நல்லது. அந்த வகையில் குழந்தைகளுக்கு 1-3 வயதிருந்தால் 19 கிராம் அளவும், 4-8 வயதிருந்தால் 25 கிராம் அளவும் இருப்பது போதுமானது. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் முற்றிலுமாக மாறுபடும்.

ஆண், பெண்?

ஆண்களில் 9-13 வயதுள்ளோருக்கு 31 கிராம் அளவும், 14-50 வயதுள்ளோருக்கு 38 கிராம் அளவும், 51-70 வயதுள்ளோருக்கு 30 கிராம் அளவும், 70 வயதுக்கு மேலானோர்க்கு 30 கிராம் அளவும் இருப்பது நல்லது.

பெண்களில் 9-18 வயதுடையருக்கு 26 கிராம் அளவும், 19-50 வயதுடையருக்கு 38 கிராம் அளவும், 51-70 வயதுடையருக்கு 26 கிராம் அளவும், அதற்கு மேலுள்ளோருக்கு 21 கிராம் அளவும் இருப்பது சிறந்தது.

ஆராய்ச்சி

கொழுப்புகள் கொண்ட உணவுங்களை வைத்து செய்த ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகள் நமது உடலை முழுவதுமாக மாற்றம் பெற செய்து விடுமாம். அதிலும் குறிப்பாக மூளையின் பாதிப்பு தான் இதில் குறிப்பிடத்தக்கது.

இரத்த நாளங்கள்

மூளையின் செயல்திறனை அதிகரிக்க இரத்த ஓட்டம் சீராக இருந்தால் போதும். இரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்திருந்தால் நிச்சயம் மூளைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இவை முழுமையாக தடையாவதற்கு காரணமே இந்த கொழுப்பு உணவுகள் தான்.

காரணம்

நாம் சாப்பிட கூடிய கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவுகள் தான் நம்மை பெரிதும் பாதிக்கின்றன. இந்த வகை உணவுகளை தவிர்த்தாலே பலவித பிரச்சினைகளில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.

கொழுப்பு கொண்ட உணவுகள் நேரடியாக மூளையின் இரத்த போக்கை தான் பாதிக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எனவே, இதனால் மூளை தனது செயல்திறனை இழக்க நேரிடும்.

பலவீனம்

கொழுப்புகள் நிறைந்த உணவுகள் உங்களின் உடலை பலவீனமாக மாற்றி விடும். இவை முதலில் மூளையின் செயல்திறனை குறைக்க செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மந்த நிலையை உருவாக்குகிறதாம். கிட்டத்தட்ட மோசமான பாதிப்பு இந்த வகை உணவுகளால் உண்டாகிறது என்பதே நிதர்சனம்.

%d bloggers like this: