உங்க வீட்டுல பேய் இருக்கா? இல்லையானு கண்டுபிடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் போதும் தெரியுமா?

எதிர்மறை சக்திகள்

உங்கள் வாழ்க்கையில் இந்த பிரச்சினைகள் இருந்தால் அதற்கு எதிர்மறை சக்திகளும் காரணமாக இருக்கலாம் அல்லது எதார்த்தமாக ஏற்படுவதாக கூட இருக்கலாம். உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறதா என்பதை ஒரு கிளாஸ் தண்ணீர் மூலமே கண்டுபிடித்து விடலாம்.

உங்கள் வீட்டை காப்பாற்றுங்கள்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செல்ல பிராணிகள் திடீரென அசாதாரணமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால், திடீரென பணநஷ்டம் அதிகம் ஏற்பட்டால், உங்கள் குழந்தைகள் தவறான பாதையில் செல்ல தொடங்கினால், உங்களுக்கு பிடித்த தாவரங்கள் வாட தொடங்கினால் உங்கள் வீட்டில் கண்டிப்பாக எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம்.

வாஸ்து சாஸ்திரம்

வீட்டில் எதிர்மறை சக்திகள் இருப்பது தெரிந்து விட்டால் பயத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவது, வீட்டை இடித்து கட்டுவது, மூடநம்பிக்கையால் பூஜைகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் ஆனால் இது எதுவும் பயன்தருவதாக இருக்காது. இந்து மதத்தில் இந்த எதிர்மறை சக்திகளை விரட்ட வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்துவார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க இதனை பயன்படுத்தலாம்.

எதிர்மறை ஆற்றல்

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் எதிர்மறை ஆற்றல்கள் எப்போது வேண்டுமென்றாலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை உங்கள் ஆரா மீது பாதிப்பை ஏற்படுத்தி உங்கள் குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை கண்டறிவது எப்படி என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

தண்ணீர் சோதனை

உங்களை சுற்றி ஏதேனும் எதிர்மறை சக்திகள் இருக்கிறதா என்பதை வெறும் தண்ணீர் மூலமே கண்டறிந்து விடலாம். இந்த சோதனை மூலம் எதிர்மறை சக்திகள் இருப்பதை உறுதிசெய்து விட்டால் அதனை வெளியேற்றும் செயலை தொடங்கிவிடுங்கள்.

சுத்தமான கண்ணாடி டம்ளர்

இந்த சோதனைக்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது சுத்தமான எந்த கீறல்களும் இல்லாத சுத்தமான ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து கொள்ளுங்கள். குறிப்பாக டம்ளரில் கைரேகைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த சோதனை செய்யும்போது கையுறை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் அந்த டம்ளரில் உங்கள் இருப்பு இருப்பதை கட்டிக்கொள்ளாதீர்கள்.

கடல் உப்பு

இந்த சோதனைக்கு முதலில் கடல் உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உப்பை பயன்படுத்தாதீர்கள். டம்ளரில் மூன்றில் ஒரு பங்கை இந்த உப்பை கொண்டு நிரப்புங்கள்

வெள்ளை வினிகர்

இந்த உப்புடன் வெள்ளை வினிகரை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டாவது பாதியில் வினிகரை நிரப்பி கொள்ளுங்கள், ஆனால் இரண்டையும் ஒருபோதும் கலந்து விடாதீர்கள்.

தெளிவான நீர்

இறுதியாக டம்ளரின் மூன்றாவது பாதியில் தெளிவான நீரை நிரப்பவும். இதற்கு சாதாரணமான நீரே போதும். ஆனால் மீண்டும் இதனை கலந்து விடக்கூடாது. டம்ளரை அப்படியே வைத்திருக்கவும்.

இடத்தை தேர்வு செய்யுங்கள்

இப்போது டம்ளரை உங்கள் கையில் எடுத்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எங்கு எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ அங்கே செல்லுங்கள். இடத்தை தேர்ந்தெடுத்தவுடன் அந்த இடத்தில் டம்ளரை மறைவாக வைக்கவும். இதனை பகல் பொழுதில் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த டம்ளர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத படி நன்கு மறைவாக வைக்கவும். உங்களை தவிர வேறு யாருக்கும் அந்த டம்ளர் இருப்பது தெரியக்கூடாது.

24 மணி நேரம்

இந்த சோதனை செய்யும் போது குழந்தைகள் வீட்டில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். அந்த டம்ளர் அதேஇடத்தில் 24 மணி நேரம் இருக்கவும். அதனை எந்த தொந்தரவும் செய்துவிடாதீர்கள்.

தண்ணீரில் மாற்றம்

டம்ளரில் இருக்கும் தண்ணீரை 24 மணி நேரத்திற்கு பிறகு சோதித்து பார்க்கவும். தண்ணீரும், அதில் இருக்கும் மற்ற பொருட்களும் தெளிவாக இருந்தால் உங்கள் வீட்டில் எந்த தீயசக்திகளும் இல்லை. உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதார்த்தமாகத்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். ஆனால் ஒருவேளை தண்ணீர் வெளிர் நிறமாகவோ அல்லது பச்சை நிறமாகவோ மாறி இருந்தால் உங்கள் வீட்டில் நிச்சயம் தீயசக்திகள் இருக்கிறது என்று அர்த்தம். வீட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த சோதனையை செய்யுங்கள். இந்த மாற்றங்கள் தொடர்ந்தால் உடனடியாக உங்கள் வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் வேலைகளில் இறக்கிவிடுங்கள்.

%d bloggers like this: