6 மணிக்கு மேல் பெண்கள் தலைமுடியை சீவக்கூடாது என முன்னோர்கள் கூறியதற்கான இருக்கும் காரணம் தெரியுமா?

வலுவான நம்பிக்கைகள் கொண்ட நாடு
நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகள் என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சிலர் இதற்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானரீதியான காரணங்களை யோசித்து அதற்கான விளக்கங்களை அறிந்து

கொள்கின்றனர். ஆனால் பலர் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அதனை இன்னும் நம்பி கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற நம்பிக்கைகள் வருங்கால தலைமுறையினரிடம் இருக்காது.

வாழ்வின் ஒருபகுதியாக மூடநம்பிக்கை மாறிவிட்டது

இன்றும் நம் சமூகத்தில் பல பழங்கால நம்பிக்கைகள் நிலவி வருகிறது. நீங்கள் ஒரு மூடநம்பிக்கையை இன்றும் பின்பற்ற வேண்டுமா அல்லது பின்பற்றக்கூடாதா என்பது முக்கியமல்ல. ஆனால் சிலசமயம் நமது அன்றாட வாழ்வில் சில மூடநம்பிக்கைகள் தவிர்க்கும் முடியாத ஒன்றாக மாறிவிடும்.

பெண்களுக்கு கொடுக்கப்படும் அறிவுரை

நமது சமூகத்தில் பெரும்பாலும் நிலவும் ஒரு மூடநம்பிக்கை முடியை பற்றியதாகும். அம்மாக்கள் எப்பொழுதும் சூரியன் அஸ்தமித்தவுடன் முடியை சீவக்கூடாது என்று தங்கள் மகள்களுக்கு கூறுவார்கள். மாலை நேரத்தில் முடியை விரித்து போடவும் கூடாது என்று கூறுவார்கள். இது மட்டுமின்றி முடி தொடர்பான பல மூடநம்பிக்கைகள் நமது சமூகத்தில் நிலவிதான் வருகிறது.

மாலை நேரத்தில் முடியை வாரக்கூடாது

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை விரித்து போட கூடாது என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் எதிர்மறை சக்திகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகுதான் அதிகம் வெளியே வருமாம். இந்த சமயத்தில் அவை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும், அழகான மற்றும் நீண்ட முடி உள்ள பெண்கள் அவற்றை எளிதில் கவர்வார்கள். இதனால் அந்த பெண்கள் அந்த எதிர்மறை சக்திகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கெட்ட சகுனம்

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை லூசாக கட்டி வைப்பதோ அல்லது மிகவும் இறுக்கமாக கட்டி வைப்பதோ கூடாது என்று கூறப்படுகிறது. அதேசமயம் பூஜை செய்யும் நேரத்தில் முடியை பின்னாமல் வைத்திருக்க கூடாது. இது உங்கள் குடும்பத்திற்கு கேட்ட சகுனமாக கருதப்படுகிறது.

முடியை வெளியே போடுதல்

தலைமுடியை சீவுவது மட்டுமின்றி கீழே விழுந்த முடியை வெளியே தூக்கி எறிவதும் தவறான செயல் என்று நமது சமூகத்தில் கூறப்பட்டு வருகிறது. கீழே விழும் முடியை பத்திரமாக எடுத்து பாதுகாப்பான முறையில் வெளியேற்ற வேண்டும். ஏனெனில் உங்கள் முடி தவறானவர்கள் கையில் கிடைத்தால் அதை வைத்தே உங்களுக்கு அவர்களால் பல பிரச்சினைகளை ஏற்படுத்த இயலும்.

பௌர்ணமி அன்று தலை சீவுவது

பௌர்ணமி தினத்தன்று கதவு அல்லது ஜன்னல் அருகே நின்று கொண்டு தலை சீவுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு செய்வது தீயசக்திகளை நீங்களே உங்க வீட்டுக்கு அழைப்பது போன்றதாகும்.

மாதவிடாயின் பொது தலைக்கு குளிப்பது

நமது சமூகத்தில் நிலவும் மற்றொரு பழைய மூடநம்பிக்கை மாதவிடாயின் முதல் நாளில் தலைக்கு குளித்தால் பெண்களுக்கு புத்தி பேதலித்து விடும் என்பதாகும். மேலும் மாதவிடாயின் போது இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது பெண்களுக்கு அதிக இரத்த போக்கை ஏற்படுத்துவதுடன் அவர்களை பலவீனமாக உணரச்செய்யும்.

சீப்பை கீழே போடுவது

நமது சமூகத்தில் இருக்கும் மற்றிரு மூடநம்பிக்கை தலை சீவும்போது சீப்பை கீழே தவற விட்டுவிட்டால் அவர்களுக்கு விரைவில் ஏதாவது கெட்ட செய்தி வரும் என்பதாகும். அதுமட்டுமின்றி வீட்டில் முடியை அங்கங்கே சிதற விடுவது குடும்பத்தில் சிக்கல்களையும், சண்டைகளையும் உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

%d bloggers like this: