விஜயகாந்த் மறுபடியும் திசை மாறுகிறாரா? திரைமறைவு ‘மூவ்’
விஜயகாந்த் தரப்பிலிருந்து மறுபடியும் அதிமுக.வுடன் விறுவிறுப்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. பாஜக.வின் தலையீட்டால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.
Continue reading →
இந்த குணம் உள்ள பெண் உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவார் என்று கூறுகிறார் சாணக்கியர்…!
நல்ல மனைவிக்கான அடிப்படை
சிறந்த மனைவிக்கான அடிப்படை தகுதிகளாக சாணக்கியர் கூறுவது என்னவெனில் மனைவியானவள் காலை நேரத்தில் கணவனுக்கு அம்மா போல சேவை செய்ய வேண்டும், நாள் முழுவதும் சகோதரி போல அன்பு செலுத்த வேண்டும், இரவில் விலைமகள் போல இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
சாணக்கிய நீதி
Continue reading →
முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் ஆபத்தா? ஏன் தெரியுமா..?
முட்டை..! முட்டை..!
பல்வேறு ஆரோக்கியங்கள் முட்டையில் நிறைந்துள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். குறிப்பாக பிராய்லர் முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. முட்டையின் சத்துக்கள் என்பது மஞ்சள் கரு, வெள்ளை பகுதி என தனி தனியாகவே பார்க்கப்படுகிறது.
மஞ்சள் கரு-சத்துக்கள்
Continue reading →
மகா சிவராத்திரி தரிசனம்! – தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!
மனிதன் ஒருவன், பெரிய இடத்துக்கு நெருக்கமானவனாக இருந்துவிட்டால், அவன் மனதில் கர்வம் தலைதூக்குவது இயல்பு. சராசரி மனிதர்களே இப்படியென்றால், பகவானுக்கே நெருக்கமாக இருந்த அர்ஜுனனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
ஒருமுறை அர்ஜுனனுக்கு, ‘தன்னைவிடவும் சிவ பக்தியில் சிறந்தவர்கள் யாருமில்லை’ என்ற எண்ணம் தோன்றி, அந்த எண்ணமே கர்வமா கவும் மாறியது. அவனது கர்வத்தைப் போக்க நினைத்த கிருஷ்ணர், ஒருநாள் அவனை திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றார்.
ஓரிடத்தில், சிவகணங்கள் கூடை கூடையாக சிவ நிர்மால்யப் பூக்களைக் கொண்டு வந்து குவித்தவண்ணம் இருந்தனர். அவர்களிடம் அர்ஜுனன், ‘‘இவ்வளவு நிர்மால்யங்களைக் கொண்டு வருகிறீர்களே, இவை யார் பூஜை செய்த மலர்கள்’’ என்று கேட்டான்.
‘`பூவுலகில் யாரோ பீமசேனனாம். அவன் சிவபெருமானுக்கு அர்ப்பணித்த மலர்களின் நிர்மால்யங்களே இவை’’ என்றார்கள்.
இப்போது கிருஷ்ணன் கேட்டார்: ‘`சரி, அர்ஜுனன் பூஜித்த மலர்களின் நிர்மால்யங்கள் எங்கே?’’
‘`அதோ பாருங்கள்… சிறு குவியலாக கிடக்கின் றனவே, அவைதான் அர்ஜுனன் சமர்ப்பித்த புஷ்பங்களின் நிர்மால்யங்கள்.’’
அர்ஜுனனுக்கு வியப்பு. ‘`கண்ணா, இது என்ன விந்தை? பீமன் சிவ பூஜை செய்தே நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க, எப்படி இவ்வளவு மலர்களை அவன் ஈசனுக்குச் சமர்ப்பித்திருக்க முடியும்?’’ என்று கேட்டான்.
‘`உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ கொஞ்சம் மலர்களைச் சிவனுக்கு அர்ப்பணித்து மணிக்கணக்கில் பூஜை செய்கிறாய். ஆனால் பீமனோ, தினமும் காலையில் நந்தவனத்துக்கு வந்து, அங்கிருக்கும் அத்தனை மலர்களையும் மானசீகமாக சிவார்ப்பணம் செய்துவிடுகிறான். மேலும், தான் உண்ணும் உணவு, பருகும் நீர், செய்யும் செயல்கள் ஆகிய அனைத்தையும் சிவார்ப்பணம் செய்துவிடுகிறான். அப்படி அவன் செய்யும் மானஸ பூஜை, நீ செய்யும் பூஜையைவிட உயர்ந்தது’’ என்றார் கண்ணன். அர்ஜுனனின் கர்வம் அகன்றது.