அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகிறது… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்

அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.

பழம் நழுவி பாலில் விழும் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு இந்த முறையும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பணி தீவிரமாக நடந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக தங்களது கூட்டணியில் இணைக்க அதிமுகவும் திமுகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது.

அதிக சீட்

எந்த கூட்டணியில் அதிக தொகையில் ஒழிக்கப்படுகிறதோ அந்த தொகுதியில் இணைவது என தேமுதிக முடிவெடுத்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளும் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

விஜயகாந்த் ஆலோசனை

இந்த நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் தேர்தல் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிமுக கூட்டணியில் இணைவது என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாமக ஆதரவு

இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுக்கு 5+1 இடங்கள்

அதிமுக கூட்டணியில் இணைந்தால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு கிரீன் சிக்னல் காட்டி உள்ள அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலிலும் ஆதரவு

அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலை தவிர உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக ஆலோசனை

உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள விஜயகாந்த், தேர்தல் கூட்டணிக்காக முதல் முறையாக நேற்று கட்சியின் தலைமை அலுவலகம் வந்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் 4 இடங்கள்

திமுக கூட்டணியில் மூன்று அல்லது நான்கு சீட்டுகள் தேமுதிகவுக்கு ஒதுக்குவது என கூறப்பட்டதால் அந்த கூட்டணியில் இணைவதை விட்டுவிட்டு அதிமுக கூட்டணியில் இணைவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை, திமுக கூட்டணியில் இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. அதே போன்று தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் திமுக கூட்டணியில் இடம்பெறுவது இல்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது

%d bloggers like this: