ஆமணக்கு எண்ணெய்யை வைத்து மலச்சிக்கலை ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி?

சாப்பாட்டு ஆசை யாரை தான் விட்டு வைத்தது. “எங்கும் சாப்பாடு எதிலும் சாப்பாடு” என்கிற நினைப்பில் தான் நம்மில் முக்கால் வாசி பேர் இருக்கின்றோம். சாப்பாடு என்றால் வாயை பிளந்து கொண்டே நாம் போவோம். உணவின் மீது நமக்கிருக்கும் காதல் தான் நம்மை இந்த அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அளவாக சாப்பிடுவதால் எந்தவித பாதிப்பும் நிச்சயம் ஏற்பட போவதில்லை.

ஆனால், கட்டுக்கடங்காத காளை போல சாப்பாட்டை மேய்ந்து விட்டால் அவ்வளவு தான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பின்னர், இதனால் ஏற்பட கூடிய பின் விளைவுகளை பற்றி கவலை படுகின்றனர். இதனால் பரிசாக கிடைப்பது மலச்சிக்கல் தான். தினமும் காலையில் எழுந்தவுடனே மலச்சிக்கலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது.

இந்த பிரச்சினைக்கு மிக சுலபமாக முற்றுபுள்ளி வைத்து விடலாம். இதற்கு ஆமணக்கு எண்ணெய்யே போதும். ஆமணக்கு எண்ணெய்யை வைத்து எப்படி மலச்சிக்கலுக்கு தீர்வை காண்பது என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல்

சீரற்ற உணவு முறையால் ஏற்பட கூடிய பாதிப்பு தான் மலச்சிக்கல். சாப்பிடும் உணவு சரியான முறையில் செரிமானம் அடையாமல் இருந்தால் அவை மலச்சிக்கலாக மாறி விடும்.

இது போன்ற பிரச்சினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகின்றன. இதை ஆமணக்கு வைத்து சரிவதற்கு முக்கிய காரணம் இதன் மூலிகை தன்மை தான்.

வைத்தியம் #1

மலச்சிக்கலை போக்குவதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும். இதை பல நாடுகளில் முதன்மை முறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரஞ்சு சாறு 1 கப்

ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் ஆமணக்கு எண்ணெய்யை ஆரஞ்சு சாற்றில் கலந்து கொள்ளவும். அதன்பின் இதனை குடித்து வரலாம். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகி விடும். மேலும், வயிற்றில் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்து விடலாம்.

வைத்தியம் #2

பண்டைய காலத்தில் இந்த இரண்டாவது வைத்திய முறையை தான் பின்பற்றி வந்தனர். இதற்கு தேவையானவை…

ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்

வெது வெதுப்பான பால் 1 கிளாஸ்

தயாரிப்பு முறை

முதலில் பாலில் ஆமணக்கு எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை தினமும் இரவு நேரத்தில் குடித்து வரவும். இந்த வைத்தியம் குடல் பகுதியை இலகுவாக்கி மலச்சிக்கலை நீக்கி விடும். பால் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் மற்ற வைத்திய முறைகளை பின்பற்றி வரலாம்.

வைத்தியம் #3

இந்த முறை நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த முறை தான். இதை பாட்டி வைத்தியம் என்று கூட சொல்லலாம்.

தேவையானவை…

ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 கப்

தயாரிப்பு முறை

எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்டு அதில் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொள்ளவும். பிறகு இந்த எண்ணெய் அடியில் தேங்கிய பின் இதை குடித்து வரவும். இதை தினமும் 1 முறை செய்து வந்தா; மலச்சிக்கல் பிரச்சினை நீங்கி விடும்.

வைத்தியம் #4

1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை எடுத்து கொண்டு அதை தொப்புளில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். இதே போன்று ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். அத்துடன் செரிமான கோளாறுகளும் தீரும்.

%d bloggers like this: