இந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை உண்டாக்கும் தெரியுமா?

ஜோதிடத்தின் படி வெள்ளி

ஜோதிட சாஸ்திரத்தின் படி வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திர கிரஹத்துடன் தொடர்புடையதாகும். இது நமது உடலில் இருக்கும் நீர் மற்றும் கபத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். சாஸ்திரங்களின் படி வெள்ளியானது ஒருவர் வாழ்க்கையில் பெருமையையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு அதனை அழகாகவும் மாற்றும்.
வியாழன் மற்றும்

சந்திரனின் அருளை பெற

வேத சாஸ்திரங்களின் படி வியாழன் மற்றும் சந்திர கிரகத்தின் அருளை பெற வெள்ளி உங்களுக்கு முழுமையாக உதவும். மேலும் இது உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுவதுடன் பல ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது.

நேர்மறை சக்திகள்

உங்கள் வீட்டில் பல்வேறு வடிவங்களில் வெள்ளியை சமயலறையில் வைப்பது, படுக்கையறையில் வைப்பது, விரல்களில் அணிந்து கொள்வது போன்றவை எப்போதும் உங்களை சுற்றி ஒரு நேர்மறை சக்தியை வைத்திருக்கும். இது மட்டுமின்றி இது மோசமான சூழ்நிலைகளில் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். சுண்டு விரலில் மோதிரம் அணிவதன் மூலம் அதிக ஆற்றலை பெறுவது எப்படி இரு மேற்கொண்டு பார்க்கலாம்.

வெள்ளியும், தண்ணீரும்

கடையில் உங்களுக்கு பிடித்த ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கி கொள்ளுங்கள். ஒரு வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்து ஒரு கப் தண்ணீரில் மோதிரத்தை இரவு முழுவதும் போட்டு வைக்கவும் இது ஆற்றலை சுத்திகரிப்பு செய்யும். அதன்பின்னார் அந்த மோதிரத்தை உங்கள் பூஜையறையில் வைக்கலாம் அல்லது நீங்கள் உங்கள் சுண்டு விரலில் கூட அணிந்து கொள்ளலாம். பின்னர் இந்த மோதிரத்தை சந்தனத்தில் நனைப்பதன் மூலம் அதிலுள்ள நேர்மறை சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள். இந்த மோதிரத்தை உங்கள் வலது கையின் சுண்டு விரலில் அணிந்து கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களும், அதிசயங்களும் நடப்பதை நீங்களே உணரலாம்.

நல்ல பலன்கள்

வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது இது உங்களின் அழகையும், ஆளுமையையும் அதிகரிக்கும், ஏனெனில் இது வியாழன் மற்றும் சந்திர கிரகத்துடன் தொடர்புள்ளது. இது உங்கள் மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் பரவ செய்யும்.

ஆரோக்கிய பலன்கள்

உங்கள் ஜாதகத்தில் நிலவின் தாக்கமானது குறைவாக இருந்தால் அது உங்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அதனை பலவீனமடையவும் செய்கிறது. வெள்ளி மோதிரமானது சந்திரனின் தாக்கத்தை உங்கள் மீது அதிகரிப்பதுடன் உங்களுக்கு ஏற்படும் சளி, இருமல் மற்றும் மூட்டு வலிகள் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.

வெள்ளி செயின்

ஒருவேளை உங்களுக்கு வெள்ளி மோதிரம் அணிவதில் அசௌகரியங்கள் இருந்தால் நீங்கள் வெள்ளி செயின் அணிய முயற்சி செய்யுங்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் மோதிரம் வழங்கும் அதே நன்மைகளை வழங்கக்கூடும். மேலும் இது உங்கள் தொண்டை சக்கரத்தை பராமரிக்க உதவும், சரியான முறையில் இதை அணிந்தால் அது உங்கள் தூக்க பிரச்சினை மற்றும் பேச்சு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

வெள்ளி பாத்திரங்கள்

வெள்ளியை அணிவது மட்டுமின்றி வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பதும் கூட உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். வெள்ளி பாத்திரத்தில் தேன் அல்லது பால் குடிப்பது உங்களுடைய சளி மற்றும் இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ விரும்புபவர்கள் வெள்ளி உபயோகிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

%d bloggers like this: