இன்னைக்கு வேற நிகழ்ச்சி இருக்கு! நாளைக்கு வர்றேன்! திமுகவுக்கு திருமா ஷாக்!

திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி உடன்பாடு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.   இதுவரை, காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள், திமுகவுடன் கூட்டணி  உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இன்னும் மதிமுக, விசிக, இடதுசாரிகள், மமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில், திமுகவின் தலைமைக் கழகமான, அண்ணா அறிவாலயத்திற்கு இன்று வந்து, கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட, திருமாவளவனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

ஆனால், அவர், இன்று தனக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால், நாளைய தினம் பேச்சு வார்த்தைக்கு வருவதாக,  திமுக தலைமைக்கு தகவல் அனுப்பிவிட்டார். இதனால் அறிவாலயத்தில் காத்திருந்த திமுக பேச்சு வார்த்தைக் குழுவினர் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இந் நிலையில் தமது கட்சியின் இணையதள பிரிவினருடன் திருமாவளவன் தீவிர ஆலோசனை செய்ததாகவும், சமூக ஊடகங்களில் கூட்டணிக்கு எந்த வகையில் வரவேற்பு இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

%d bloggers like this: