திமுகவில் தலா 2 தொகுதிகள்! நாளை இறுதிப் பட்டியல்!

திமுக கூட்டணியில் நாளை இறுதிப் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் லீக் கட்சி, அவர்களது ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. மேலும் ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக் கட்சி, திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

மற்ற கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், தேமுதிக கூட்டணிக்குள் வரும் என்ற தகவலால், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.  இந் நிலையில், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்கிறது என்ற தகவல் திமுகவுக்கு கிடைத்ததை அடுத்து, நாளைய தினம் திமுகவின் இறுதிக் கட்ட பேச்சு வார்த்தைக்கு விசிக, மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. 

இந்த 4 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மனித நேய மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என்றும், அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்.  

ஆக,   காங்கிரஸ், முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு 19 தொகுதிகள் வழங்கப்படும் நிலையில், மீதி இருக்கும் 21 தொகுதிகளில் மமக, கொங்கு மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், 18 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

%d bloggers like this: