பரபரப்பான சூழலில் விஜயகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தைச் சந்திக்க சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும் தொகுதி பங்கீடு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது.

மேலும், தே.மு.தி.க உடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அ.தி.மு.க தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இருப்பினும், இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்றுவரை இழுப்பறி நீடித்துவருகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தே.மு.தி.க சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு வாங்கப்பட்டது. மேலும், நாளை விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரைச் சந்தித்துப் பேசினர். தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைப்பதற்கு தி.மு.க பெரிதும் முயற்சி செய்யாதநிலையில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க சார்பில் தே.மு.தி.கவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இழுபறி நீடித்துவருகிறது.

%d bloggers like this: