சமையல் அறையில் கட்டாயம் செய்ய கூடாத 10 விஷயங்கள்..!

வெவ்வேறு பலகைகள்

உணவு பொருட்களை நறுக்கி பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருத்தல் வேண்டும். சாப்பிட கூடிய உணவு பொருட்களை சைவம் மற்றும் அசைவம் என தனித்தனியாக பிரித்து தான் நறுக்க வேண்டும். அதிலும் அசைவத்திற்கும் சைவத்திற்கும் தனி தனி பலகைகளை பயன்படுத்துவது நல்லது.

நான்-ஸ்டிக்..!

முன்பெல்லாம் எல்லா வகையான சமையலையும் மண் பாத்திரத்தில் செய்து வந்தோம் ஆனால், இப்போது இந்த நிலை முற்றிலுமாக மாறி விட்டது. தற்போதைய ட்ரெண்டில் மக்கள் non-stick பாத்திரங்களை தான் அதிக அளவில் உபயோகப் படுத்துகின்றனர். இது போன்ற பாத்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வியர்வை

சமைக்கின்ற அறையில் ஒரு எக்ஸ்ஹாஸ்டீ ஃபேன் ஆவது இருப்பது நல்லது. அப்போது தான் வியர்வை குறைவான அளவில் வெளியேறும். இல்லையேல் இவை சமைக்கும் உணவுகளிலும் கலந்து, அவர்களுக்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

காய்கறி நறுக்குதல்

காய்கறிகளை அரிவாள்மணையில் அரிந்த காலம் மலையேறி போய் விட்டது. இப்போதெல்லாம் இதற்கு மாறாக கத்தி போன்றவற்றை வைத்து உணவு பொருட்களை நறுக்குக்கின்றனர்.

அவ்வாறு நறுக்கிய பின் அந்த பலகையை கத்தியால் சொரண்ட கூடாது. இதனால் அவற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுடன் கலந்து உயிருக்கே ஆபத்தாகி விடும்.

சூடு செய்தல்

சமைத்த 12 மணி நேரத்திற்குள் உணவை சாப்பிட்டு விட வேண்டும். இல்லையேல் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து சக்கைக்கு சமமாக மாறி விடும். மேலும், ஒரு முறை சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட கூடாது. மேலும், இது புற்றுநோய் அபாயத்தை கூட உண்டாக்கும்.

சுத்தம்

சமைக்கும் போது அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியது சுத்தத்தை பற்றி தான். குறைந்தபட்ச சுத்தமாவது இருத்தல் வேண்டும்.

இல்லையேல் இது சமைப்போரையும் அதை சாப்பிடுவோரையும் சேர்த்தே பாதிக்கும். குறிப்பாக தும்பல், இரும்பல் போன்றவை ஏற்படும் போது கைக்குட்டையை பயன்படுத்துவது சிறப்பு.

சுவை

சமைத்த உணவை ருசி பார்க்கும் பெயரில் பலர் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த வகை செயல்கள் தான் அவர்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்யும் போது அது உடல் நலத்தை பாதிக்க கூடும் என்றும், இதனால் நோய் கிருமிகள் சமைத்த பொருளில் பரவும் என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கத்தி

பலரும் கத்தியை பயன்படுத்தும் போது மிகவும் அஜாக்கிரதையாக கையாளுகின்றனர். இது அவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் ஆபத்தை தரும்.

குறிப்பாக கீழே விழ போகும் கத்தியை ஒரு போதும் கையால் பிடிக்க நினைக்காதீர். இது உங்கள் கையை ஆழமாக கிழித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பனை திறன்

சில சாப்பாட்டு காதலர்கள் அவர்களின் கற்பனை திறனை சமையலில் தான் காட்ட நினைப்பார்கள். அவ்வாறு செய்வது பாராட்ட கூடிய ஒன்று தான்.

இருந்தாலும் சாப்பிட கூடிய உணவை கண்ட கலவையுடன் சேர்த்து சமைத்தால் உணவின் தன்மை மாறி விடும். ஆதலால், மோசமான முறைகளை முயற்சிவதை தவிர்த்து விடுங்கள்.

%d bloggers like this: