இன்விடேஷனில் விஜயகாந்த் பெயர் இல்லை.. ஆனால் ஈவ்னிங் வந்துருவாராம்.. களை கட்டும் மோடி கூட்டம்!

இன்று நடக்கப்போகும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் வருவாரா? மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அழைப்பிதழில் அவரது பெயர் இல்லை. இருப்பினும் தற்போது தேமுதிகவின் கொடியை மாநாட்டு மேடையில் சேர்த்துள்ளனராம். இதனால் விஜயகாந்த்தும் கண்டிப்பாக வருவார் என்று பரபரப்பு எழுந்துள்ளது.

விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்து 20 நாளைக்கும் மேலாகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

கடந்த முறை கன்னியாகுமரி மோடி வந்தபோதே எல்லா கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் நின்று கூட்டணி பலத்தை காட்ட வேண்டும் என்று பிளான் செய்யப்பட்டது. ஆனால் தேமுதிகவின் பிடிவாதம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்

இதனால் இன்றைய தினம் மோடி வரும்போதாவது எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் கூறியிருந்தது. இதற்காகத்தான் துணை முதல்வரே விஜயகாந்த் வீடு தேடி சென்று பேசிவிட்டு வந்தார். ராமதாசுக்கு தந்த சீட் போல அல்லது அதற்கு இணையான ஒரு சமாச்சாரத்தை தந்தே ஆக வேண்டுடும் என்று தேமுதிக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.

படம் இல்லை

இன்னைக்குதான் விழா.. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக போய் கொண்டிருக்கிறது.. இப்போது கூட்டணி முடிவாகாத நிலையில் விழாவுக்கு விஜயகாந்த் வருவாரா, என்று தெரியவல்லை. ஆனால் அழைப்பிதழில் கூட்டணி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து மோடியை வரவேற்பது போல ஒரு அச்சிட்டுள்ளார்கள். இதல் விஜயகாந்த் படம் இடம்பெறவில்லை. முதல்வர், துணை முதல்வர், இதற்கு அடுத்து ராமதாஸ் படங்கள் என வரிசையாக உள்ளன.

ராமதாஸ் புகைப்படம்

ஒருவேளை விஜயகாந்த் படத்தை போட்டுவிட்டால், அவர் வராவிட்டால் என்னாகும்? அசிங்கப்படுவது போல் ஆகிவிடுமா என்று நினைத்து விஜயகாந்த் படத்தை போடவில்லை போல் உள்ளது. இந்நேரம் கூட்டணி முடிவாகி இருந்தால், ராமதாஸ் பக்கத்திலேயே விஜயகாந்த் படமும் அமைந்திருக்கும்.

தனி பாசம்

எனினும், பாஜக மீது விஜயகாந்த்துக்கு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. விஜயகாந்த் மீதும் மோடி, அமித்ஷா, பியூஷ்கோயல் உள்ளிட்டவர்களுக்கு தனி பாசமே உள்ளது. இதற்காகவாது விஜயகாந்த் வருவார் என்றே தெரிகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது தேமுதிகவின் கொடியை விழா மேடையில் சேர்த்துள்ளனராம். இதனால் கண்டிப்பாக கூட்டத்திற்கு விஜயகாந்த்தும் வருவார் என்று சொல்கிறார்கள்.

கேப்டன் வருவாரா?

விஜயகாந்த்தை பார்த்து தமிழக மக்களுக்கு ரொம்ப நாளாகிவிட்டது. சென்னை வந்ததிலிருந்து மக்களை அவர் சந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அதனால் இன்றைக்கு கேப்டன் வந்தால் ஆசை குளிர பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள். வரட்டும் வரட்டும்!

%d bloggers like this: