ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் பேச்சு.. அம்பலப்படுத்திய துரைமுருகன்.. தேமுதிகவுக்கு இது தேவையா!

: இதெல்லாம் தேமுதிகவுக்கு தேவையா? ஒரே நேரத்தில் அதிமுக-திமுக என இரண்டு இடங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது. இதில் திமுக தரப்பு சரியான பாடத்தை தேமுதிகவுக்கு புகட்டி இருக்கிறது
.

ஏகப்பட்ட கெடுபிடி, கண்டிஷன்கள் போட்ட தேமுதிகவை திமுக, அதிமுக கட்சிகள் கைவிட்டுவிட்டன. நிர்க்கதியாய் விஜயகாந்த் நிற்கும்போது கைகொடுக்க முன்வந்தது பாஜகதான்.

பாஜக மேலிட உத்தரவால் வேறு வழியில்லாமல், அரை மனசுடன் 4 சீட் தர அதிமுக முன் வந்தது. இதை அறிவிப்பதற்குள் தேமுதிக கொடிகளை அகற்றுவதும், ஏற்றுவதும், விஜயகாந்த் படங்களை வைப்பதும், எடுப்பதும் என ஒரே அமர்க்களமாகி விட்டது.

விஜயகாந்த் படம்

ஒருவழியாக பியூஷ் கோயலை சந்தித்து உடன்படிக்கையில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிகவின் ஒரு தரப்பினர் துரைமுருகனை நேரில் சந்தித்தாக திடீரென ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படம், கொடி சகிதம் எல்லாமே அகற்றப்பட்டு விட்டன.

போன் செய்த சுதீஷ்

பின்னர் தேமுதிக நிர்வாகிகள் எதற்காக உங்களை வந்து சந்தித்தார்கள் என்று துரைமுருகனிடம் கேட்டதற்கு, “முதலில் சுதீஷ் என்னிடம் போனில் பேசினார். கூட்டணிக்கு வருகிறோம், எங்களுக்கு அதிமுக கூட்டணி வேண்டாம் என்றார்.

சரியான பதிலடி

அதற்கு நான் எங்களிடம் சீட் இல்லையே, இருந்தால்தானே உங்களுக்கு கொடுப்பதற்கு? இதில் முடிவெடுக்க வேண்டியது திமுக தலைவர்தான் என்றேன். அதையே தான் இப்போது வந்த நிர்வாகிகளிடமும் கூறி அனுப்பி விட்டேன்.” என்று சரியான பதிலடியை தந்திருக்கிறார் துரைமுருகன்.

நோஸ்-கட்

இப்படி ஒரே நேரத்தில் 2 அணிகளுடன் ஒருத்தருக்கு தெரியாமல் இன்னொருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இப்போது தேமுதிகவுக்கு பெரிய நோஸ்-கட் ஆகி உள்ளது. தேமுதிக சார்பில் யார் பேரில் இதெல்லாம் நடக்கிறதோ தெரியாது… ஆனால் கடைசியில் விஜயகாந்த் பெயர்தான் இப்போது கெட்டுப் போயுள்ளது.

%d bloggers like this: