வயதானவர்களுக்கான உணவு முறை

இன்றைய திகதியில் எம்முடைய இல்லங்களில் வசிக்கும் வயதானவர்களுக்கு எம்மாதிரியான உணவு முறையை வழங்குவது என்பது குறித்து எம்மிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. வயதானவர்களுக்கு அவர்களின் செயல்பாடுகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் உணவு வகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். 

அண்மைய ஆய்வின் படி குறிப்பாக புரத சத்து அதிகம் உள்ளதாகவும், குறைவான கலோரி கொண்ட உணவுகளையும் அவர்களுக்கு உணவு முறையாக வழங்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்நிலையில் எமக்கு அதிக புரத சத்துள்ள உணவு வகைகள் என்ன? என்பது குறித்தும், குறைவான கலோரி உள்ள உணவு உணவுகள் என்ன என்பது? குறித்தும் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன.இதனையும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். 

 அதிக புரத சத்து உள்ள உணவுகள் 

முட்டை, பாதாம் பருப்பு, கோழிக்கறி, ஓட்ஸ், பால், ப்ராக்கோலி ஆகியவை குறிப்பிடலாம்.

குறைந்த கலோரி கொண்ட உணவுகள்

ஓட்ஸ், சூப், முட்டை, மீன், மீன் எண்ணெய், பொப்கார்ன் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதனை ஒவ்வொரு முதியவர்களுக்கும் அவர்களின் தசைகளின் செயற்பாடு, நரம்புகளின் செயற்பாடு, ரத்த நாளங்களின் செயற்பாடு, அவர்களின் உடற்பயிற்சி, அவர்களின் சமூக செயற்பாடு ஆகியவற்றைப் பொருத்து, எதை உணவாக கொடுக்கலாம் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்வார்கள். அதனை நாம் வழங்கவேண்டும்.  

இவ்வாறு வழங்கத் தொடங்கினால், முதியோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ இயலும்.அத்துடன் காய்கறிகளையும், பழங்களையும் அவர்கள் விரும்பும் வகையில் சாறாகவோ, அல்லது வேக வைத்தோ வழங்கலாம்.

%d bloggers like this: