இதுதான் பாமக தொகுதிகளா.. இவர்கள்தான் வேட்பாளர்களா.. பரபரப்பாக உலா வரும் பட்டியல்!

பாமக போட்டியிடும் உத்தேச தொகுதிகளில், உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் என்று ஒன்று உலா வருகிறது. அந்த வேட்பாளர் பெயர் பட்டியலில் சௌமியா அன்புமணி பெயர் உள்ளது போனஸ் செய்தி!

யாருக்கு என்ன தொகுதிகள், யார் யார் வேட்பாளர்கள் என்பதில் கட்சிகள் முனைப்போடு இறங்கி உள்ளன. இதில் இன்னும் கூட்டணியே யாருடன் என்று தெரியாமல் தேமுதிக, தமாகா என்று தவித்து வருகின்றனர்.

ஆனால் பாமகவோ 7+1 வாங்கிய அன்றிலிருந்தே தெம்பாக உள்ளனர். இனி அடுத்தடுத்த தொகுதி வேலைகளிலும் மும்முரமாக இறங்கிவிட்டனர்.

இப்போது ஒரு உத்தேச பட்டியல் ஒன்று உலா வருகிறது. இது பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஆகும்.

தர்மபுரி, விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், மத்திய சென்னை இவைகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்று இந்த பட்டியலில் உள்ளது. இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள்:

தர்மபுரி – சவுமியா அன்புமணி

விழுப்புரம் – வடிவேல் இராவணன்

திண்டுக்கல் – திலகபாமா (மாற்று தொகுதி கோரப்பட்டுள்ளது , வேட்பாளர் கவிஞர்தான்)

விருத்தாசலம் – டாக்டர். கோவிந்தசாமி

ஶ்ரீபெரும்புதூர் – டாக்டர் வைத்தியலிங்கம்

அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி

மத்திய சென்னை – சாம் பால்

ஆகியோர்தான் என்று இந்த பட்டியல் கூறுகிறது. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் பெருமளவு வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களே. இதில் சவுமியா அன்புமணி புது வரவு. தருமபுரி அல்லது ஆரணியில் அன்புமணி ராமதாஸ்தான் போட்டியிட இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த முறை மனைவியை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: