சுயஇன்பம் பண்ணாம இருக்க முடியலயா? அத நிறுத்தறது ஏன் கஷ்டம்? உண்மை இதுதான்

எத்தனை முறை

எந்த அளவு தீங்கு விளைவிக்காதது போன்ற சந்தேகங்கள் இருக்கும். நிறைய ஆண்களிடம் எழும் கேள்வி “எத்தனை முறை சுய இன்பம் காண்பது அல்லது ஒரு நாளைக்கு எத்தனை தடவை சுய இன்பம் காணலாம்” போன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிற்குள் இருக்கும். இதற்கு மருத்துவ விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஆண்கள் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைக்கு மேலாக சுய இன்பம் காணக் கூடாது என்கின்றனர். அதிகளவில் சுய இன்பம் காண்பது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக

அதிகளவில் ஆண்கள் சுய இன்பம் காண்பதால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி கூறப் போகிறோம். அதிகளவில் சுய இன்பம் காண்பது உங்கள் உடல் மற்றும் மன ரீதியாக நிறைய மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும் உங்கள் உடலில் இதனால் ஹார்மோன் மாற்றங்கள் அதிகரித்து பல பின் விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். அப்படி ஏற்படும் 11 விதமான விளைவுகள் இங்கே கூறப்பட்டுள்ளன வாங்க பார்க்கலாம். ஆனால் பயப்படத் தேவையில்லை. தெீவிரமான உடல் பிரச்சினைகள் ஏதும் உண்டாகாது. எவ்வளவு சக்தி இதில் வீணாகிறதோ அதற்கு ஏற்றபடி சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

உடல் ஆற்றல்

இது சுய இன்பத்தால் நேரடி விளைவு கிடையாது. ஆனால் உங்களின் உணர்ச்சிவதத்தால் ஏற்படும் விளைவாகும். நீங்கள் அதிகளவில் சுய இன்பம் காணும் போது உங்கள் எனர்ஜி நிறைய செலவாகும். எனவே நீங்கள் மிகவும் வலுவிழந்து காணப்படுவீர்கள். சுய இன்பம் செய்வது வெறும் மகிழ்ச்சியான விஷயம் மட்டும் கிடையாது. சுய இன்பத்தின் இறுதியில் கட்டாயம் விந்துவை வெளியேற்றியே தீர வேண்டும். இல்லையென்றால் தீராத தலைவலி உண்டாகும். உடல் சோர்வு அதிகமாகும். மன அழுத்தத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதிகமுறை சுய இன்பம் கொண்டவரானால் எல்லா முறையும் எளிதில் விந்துவை வெளியேற்றுவது கொஞ்சம் கடினம்.

லயித்துப் போவது

அதிகளவில் சுய இன்பம் காண்பது உங்களுக்கே தெரியாமல் உங்களை அடிமைப்படுத்தி விடும். சுய இன்ப மகிழ்ச்சிக்கு அடிமையாகி விடுவீர்கள். இது போதை மருந்து அடிமை பழக்கத்தை விட குறைவாகவே உள்ளது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. சிலர் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட, இவர்களுடைய நினைப்பு முழு சுய இன்பத்திலும் தான் யாரை நினைத்து சுய இன்பம் கொண்டார்களோ அதே நினைப்பிலேயே இருப்பார்கள்.

விறைப்பு பிரச்சினை

அதிகளவில் சுய இன்பம் காண்பதால் விறைப்பு செயலிழப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. விறைப்புக் குறைபாடு ஏற்படுவதற்கு வெறுமனே இந்த சுய இன்பம் மட்டும் தான் காரணம் அல்ல. இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட, சுய இன்பத்தை அளவுக்கு அதிகமாக மேற்கொள்வதும் தான் காரணம். வயது ஆவதும் கூட விறைப்புத் தன்மைக்கு காரணமாக அமையும்.

முன்னரே விந்து வெளியேற்றம்

அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள் நரம்பியல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர். அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள் விந்துவை வெளியேற்றுவதை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுவார்கள். ஆண்குறி நரம்புகள் அதிகமாக தூண்டப்பட்டு முன் கூட்டியே விந்து வெளியேறிவிடும்.

செக்ஸ் வாழ்க்கை பாதிப்பு

சுய இன்பம் காணும் ஆண்களுக்கு முன் கூட்டியே விந்து வெளியேறுவதால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிப்பை சந்திக்க நேரிடும். துணையுடனான இன்பம் பாதிக்கப்படும். சுய இன்பத்துக்கு மிகவும் அடிமையாகிவிட்ட ஆட்களுக்குப் பொதுவாகவே உடல் ரீதியான உறவுகளில் அவ்வளவு ஆர்வம் சிலருக்கு இருப்பதில்லை. அது மட்டுமின்றி சுய இன்பத்தில் அதிக ஆற்றலை வெளியிட்டு விடுவதால் கூட, நரம்பு சம்பந்தப்பட்ட துவண்டல்கள் ஏற்பட்டு உடலுறவில் ஆர்வம் குறைந்து போவதுண்டு.

மயக்கமாக உணர்தல்

அதிகளவில் சுய இன்பம் காணுதல் உங்களுக்கு தொடர்ச்சியான தூக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் மூளையில் அதிக அளவில் வெளிப்படும் டோபமைன் காரணமாக அமைகிறது. ஒரு நாளைக்கு ஆறு ஏழு முறைக்கு மேலாக சுய இன்பம் கொள்வர்கள் விந்து விரைவாக வெளியேறாமல் நீண்ட நேரம் போராட வேண்டியிருக்கும். அதனால் இறுதியில் மயக்கம் வருவது போல் உணர்வார்கள்.

முடி உதிர்தல்

அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள் முடி உதிர்தல் பிரச்சினையை சந்திக்க நேரிடும். எனவே வாரத்திற்கு 6-7 தடவைக்கு மேல் சுய இன்பம் காணும் ஆண்களுக்கு முடி உதிர்தல் மன அழுத்தத்தின் காரணமாக அதிக அளவில் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நினைவு இழப்பு

அதிகளவில் சுய இன்பம் காணுவதால் மூளையில் வெளிப்படும் டோபமைன் நினைவு இழப்பை ஏற்படுகிறது. காலப்போக்கில் இது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எப்போதும் இதே நினைப்பில் இருந்தால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடுவதுண்டு.

செக்ஸில் விருப்பமில்லை

அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள் செக்ஸ் வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு காணப்படமாட்டார்கள். ஏனெனில் சுய இன்பம் ஆண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவை பாதிக்கிறது.

வயது

வாரத்திற்கு 6-7 முறைக்கு மேலாக சுய இன்பம் காணும் ஆண்களுக்கு சீக்கிரம் வயதாகி விடும் என்று புதிய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைவதே காரணமாகும்.

%d bloggers like this: