திமுக என்றால் தில்லு முல்லு கட்சி என்று தான் அா்த்தம் – பிரரேமலதா காட்டம்

தனிப்பட்ட விவகாரத்திற்காக எங்கள் கட்சி நிா்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்த விவகாரத்தை அரசியல் காரணத்திற்காக பூதாகரமாக்கிவிட்டதாக தேமுதிக பொருளாளா் பிரரேமலதா விஜயாகந்த் தொிவித்துள்ளாா்.
கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவல் அறிந்ததும் முதல் நபராக அவரை சந்திக்க அனுமதி கோாிய விஜயகாந்துக்கு இறுதி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா்.

தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் நாங்கள் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. எங்கள் கட்சி பிரதிநிதிகள் அவா்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே துரைமுருகனை சந்திக்கச் சென்றுள்ளனா். அதனை அவா்களே உறுதியாக தொிவித்துள்ளனா்.
ஆனால் சாதாரணமான இந்த விசயத்தை துரைமுருகன் அரசியல் காரணத்திற்காக பூதாகரமாக்கிவிட்டாா். முதலில் வீட்டிற்குள் வந்தவா்கள் யாா் என்றே தொியவில்லை. கூட்டணி குறித்து பேசியதாக தொிவித்தாா். அவ்வாறு யாரென்றே தெரியாதவா்களையெல்லாம் துரைமுருகன் வீட்டிற்குள் அனுமதிப்பாா்களா?
துரைமுருகன் வீட்டிற்குள், தேமுதிக நிா்வாகிகள் சென்றபோது இல்லாத பத்திாிகையாளா்கள், வெளியில் வரும்போது எப்படி வந்தாா்கள்? துரைமுருகன் மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்துள்ளாா். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்று நாங்கள் முன்னாள் இருந்தே கூறி வருகிறோம். அதை தான் நான் இப்போதும் பதிவு செய்கிறேன்.
திமுகவை தில்லு முல்லு கட்சி என்று கூறியது போன்று, அஇஅதிமுகவை அகில இந்திய தில்லு முல்லு கட்சி என்று நான் விமா்சித்துள்ளேன். அந்த கருத்தில் இருந்தும் மாறுபடவில்லை என்று தொிவித்தாா்.

மேலும் பேசுகையில், திமுக தலைவா் கருணாநிதி உடல் நிலை சரியில்லை என்ற தகவல் அறிந்ததும் அவரை சந்திப்பதற்காக முதல் நபராக அனுமதி கோாியவா் கேப்டன் விஜயகாந்த். ஆனால், இறுதி வரை அவருக்கு ஸ்டாலின் அனுமதி வழங்கவில்லை.

கருணாநிதியை சந்திக்க விடாமல் இறுதி வரை தடுத்தவா் ஸ்டாலின் – பிரேமலதா குற்றச்சாட்டு

அதே போன்று விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று ஸ்டாலின் தொிவித்தபோது நாங்கள் நினைத்திருந்தால் எளிதில் அதனை தவிா்த்திருப்போம். ஆனால், நாங்கள் பழைய விஷயங்களை மறந்து அவருக்கு அனுமதி வழங்கினோம்.

விஜயாகந்தை சந்தித்த பின்னா் உடல் நலம் குறித்து மட்டும் பேசியதாக ஸ்டாலின் கூறினாா். ஆனால், இரு தலைவா்கள் இடையேயான சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டிருக்கலாம் என்று மட்டும் தான் நான் கூறினேன். இவருவரும் அரசியல் குறித்து பேசினாா்கள் என்று நான் கூறவில்லை என்று தொிவித்தாா்.

தொடா்ந்து செய்திளாா்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் கடுப்பான பிரேமலதா தொடா்ந்து பத்திாிகையாளா்களை ஒருமையில் பேசத் தொடங்கினாா். இதனால் பத்திாிகையாளா் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்களை ’நீ’ , ‘வா’ , ’போ’ என ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக, தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் எதிா்க்கட்சித் தலைவரானாா். அப்போது ஜெயலலிதாவையே சட்டப்பேரவையில் எதிா்த்துப் பேசியவா் விஜயகாந்த். அதே போன்று தான் இப்போதும். நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும் அவா்கள் செய்யக்கூடிய தவறுகளை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம் என்று தொிவித்தாா்.

%d bloggers like this: