வேலை நேரத்தில் இந்த 9 உணவுகளை தவறி கூட சாப்பிடாதீர்கள்..! 

வேர் கடலை

பலருக்கு இது போன்ற பருப்பு வகைகளை வேலை நேரத்தில் கொறிப்பது மிகவும் பிடிக்கும். வேர் கடலை சிறந்த உணவு தான். என்றாலும், இதனை வேலை நேரத்தில் சாப்பிட்டால் கலோரிகள் கூடி விடும். அரை கப் வேர்க்கடலையில் சுமார் 430 கலோரிகள் உள்ளது. ஆதலால், இது உடல் பருமனை அதிகரிக்கும்.

காபி

நேரம் காலம் தெரியாமல் காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. வேலை நேரத்தில் அதிக அளவு காபி குடித்தால் அது மோசமான பாதிப்பை உண்டாக்கும்.

முக்கியமாக செரிமான கோளாறு, பசியின்மை, உடல் எடை முதலிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். 1 நாளைக்கு 1 கப் காபியே அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிஸ்கட்ஸ்

தினமும் 1 பிஸ்கட் பாக்கெட்டை காலி செய்யும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், இது போன்ற உணவுகள் சுவையை தந்தாலும் உங்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், பசியின்மை போன்றவை இதனால் கிடைக்கும் பாதிப்புகள்.

மில்க்ஷேக்ஸ்

இது தற்போதைய ட்ரெண்ட் செட்டிங்காகவே உள்ளது. கையில் ஒரு மில்க்ஷேக் வைத்தே கொண்டே வேலையை பார்க்கின்றனர். ஆனால், இப்படிப்பட்ட பழக்கம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.

கூடவே கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் எடை, இதய பாதிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தொடக்க புள்ளியாக இருக்கும்.

சிக்கன்

ஃபாஸ்ட் ஃபூட்ஸ் உணவகங்களின் தாக்கம் தான் நம்மை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சிலர் வேலை நேரத்தில் எதையவது ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.

குறிப்பாக வறுத்த சிக்கன், சிக்கன் லாலிபாப், தந்தூரி சிக்கன் போன்றவை இவர்களின் பிரதான தேர்வாக இருக்கும். ஆனால், இதனால் கிடைக்கும் பாதிப்பே அதிகம். எனவே இது போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

சிப்ஸ்

எப்போதுமே எதையாவது கொறித்து கொண்டே இருங்க வேண்டும் என்கிற மோசமான பழக்கம், உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விடும்.

இதில் சிப்ஸும் அடங்கும். இவை கொழுப்பை அதிகரித்து இதய கோளாறுகளை உண்டாக்கும். மேலும் உடல் எடையையும் இரட்டிப்பாக்கும்.

பாப்கார்ன்

வேலை நேரத்தில் பாப்கார்ன் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு ஆபத்து காத்துள்ளது என்பதே உண்மை. மைக்ரோவேவ் பாப்கார்ன்கள் மிகவும் அபாயகரமான தன்மை கொண்டவை. இதனால் புற்றுநோய் கூட உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேக்குகள்

ஒரு சாதாரண கேக்கில் 10-12 கிராம் அளவு கொழுப்பும், 300-400 அளவு கலோரிகளும் உள்ளதாம். ஆதலால், இதை சாப்பிடுவோருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து நெருங்கி வருகிறது என்பது உறுதி. எப்போதாவது 1 பீஸ் சாப்பிடுவதில் தவறில்லை.

சாக்லேட்

தூக்கம் வர கூடாது என்பதற்காக இந்த சாக்லேட் ஆயுதத்தை பலரும் கையில் எடுத்து கொள்வார்கள். ஆனால், கோக்கோ அதிகம் நிறைந்த சாக்லேட்டுகளை தவிர மற்ற சாக்லேட்டுகள் உடலுக்கு தீங்கு தருபவை. குறிப்பாக கலர் கலராக உள்ள மிட்டாய்களை சொல்லலாம். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

எனவே, மேற்சொன்ன உணவுகளை வேலை நேரத்தில் தவிர்ப்பது உங்கள் உடலை நோய்கள் இல்லாமல் வைத்து கொள்ளும்.

%d bloggers like this: