கடைசியில் நான்குதான் தர முடியும்.. அதிமுக கூட்டணியில் தேமுதிக பெறப்போகும் தொகுதிகள் இவைதான்!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மொத்தம் 4 தொகுதிகள் அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று கடைசியாக ஒருமுறை நடக்க உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் எதிலும் உடன்பாட்டை எட்டவில்லை.

இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகும் என்று கூறுகிறார்கள். தேமுதிகவுக்கு மொத்தம் நான்கு தொகுதிகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது.

வடசென்னை தொகுதி

சென்னையில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளை அதிமுக – பாஜக – தேமுதிக என்று பிரித்து போட்டியிட இருப்பதாக கூறுகிறார்கள். தென் சென்னையில் பாஜக போட்டியிடும் என்று செய்திகள் வருகிறது. மத்திய சென்னையில் அதிமுக போட்டியிடும். அதன்படி வடசென்னையை தேமுதிக பெற இருக்கிறது.

திருச்சி தொகுதி

அதேபோல் திருச்சி லோக்சபா தொகுதியும் தேமுதிக வசம் செல்ல இருக்கிறது. இங்கு அதிமுக, பாஜக இரண்டும் பெரிய அளவில் பலமான கட்சிகள் கிடையாது. அதனால் தேமுதிக இங்கு போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

விருதுநகர் தொகுதி

தற்போது விருதுநகர் தொகுதி எம்பியாக அதிமுகவை சேர்ந்த டி.ராதாகிருஷ்னன் இருக்கிறார். இங்கு மதிமுக தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இந்த நிலையில் மதிமுகவை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்கள் நிற்க வைக்கப்பட வாய்ப்புள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதேபோல் பாமகவும் பலம் வாய்ந்த கட்சி. இந்த நிலையில் அங்கு தேமுதிக போட்டியிட இருப்பதாக கூறுகிறார்கள். தேமுதிகவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .

%d bloggers like this: