உடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..?

மாதுளை

பெண்களின் பிரச்சினையை மட்டும் தான் மாதுளை குணப்படுத்தும் என பலர் தவறாகவே எண்ணி கொண்டுள்ளனர். ஆண்களின் பிரச்சினையை சரி செய்யவும் சிறந்த மருந்தாக மாதுளை உள்ளது.

விறைப்பு தன்மை முதல் ஆண்மை குறைபாடு வரை குணப்படுத்தும் தன்மை இதற்குண்டு என ஆராய்ச்சிகளே சொல்கின்றன.

ஹார்மோன்

உடலில் ஏற்படுகின்ற ஹார்மோன் பிரச்சினைகளை தீர்க்க மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருப்பதால் சீரான இரத்த ஓட்டத்தை தரும். அத்துடன் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கவும் மாதுளை வழி செய்கிறது.

ஆண்களுக்கு…

ஆண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்பட கூடிய இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த மாதுளை சிறந்த மருந்தாக உள்ளது.

இதனால் தாம்பத்தியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். அத்துடன் விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விரைவிலே கருத்தரிக்க மாதுளை உதவும்.

பெண்களுக்கு…

ஆண்களை விட பல விதத்தில் பெண்களுக்கு மாதுளை உதவுகிறது. இதன் ஒவ்வொரு முத்திலும் பல்லாயிர கணக்கான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால், பல பெண்களுக்கு மாதுளையை பற்றிய சந்தேகம் அதிகமாகவே உள்ளது.

இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது, எந்த நேரத்தில் சாப்பிட கூடாது என்பன போன்ற கேள்விகள் நிச்சயம் இருக்கும்.

கலவியின் போது…

உடலுறவு வைத்து கொள்ளும் நாட்களில் ஆணும் பெண்ணும் மாதுளையை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சிறப்பான தாம்பத்தியம் இருவருக்குள்ளும் அரங்கேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிக விரைவிலே கருத்தரிக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.

கர்ப்பிணிகள்…

போலிக் அமிலம் அதிக அளவில் மாதுளையில் இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கு அருமருந்தாக இருக்கும். இரத்த சோகை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாதுளை உதவும்.

இருப்பினும் அதிக அளவில் மாதுளையை கர்ப்ப காலங்களில் எடுத்து கொள்ள கூடாது. உங்கள் உடலின் தன்மைக்கேற்ப மாதுளையை எவ்வளவு சாப்பிடலாம் என உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

பாலுணர்வை தூண்ட…

பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும் போது, ஆணுக்கு இல்லாமலோ.. அல்லது ஆணுக்கு உடலுறவு வைத்து கொள்ளும் எண்ணம் வரும் போது பெண்ணுக்கு இல்லாமலோ இருந்தால் தாம்பத்திய வாழ்வு சிறப்பாக இருக்காது.

இருவருக்கும் கூடுமான அளவிற்கு பாலுணர்வை தூண்ட மாதுளையை சாப்பிட்டு வந்தாலே போதும். இதில் உள்ள பலவித சத்துக்கள் சிறப்பான முறையில் செயல்பட உதவும்.

அந்த நாட்களில்…

மாதவிடாய் காலங்களில் மாதுளை சாப்பிடலாமா? கூடாதா? என்கிற கேள்வி பல பெண்களுக்கும் உள்ளது. மாதுளையை பற்றிய ஆய்வில் இதனை மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டால் உடல் வலு பெறும் என்றே கூறப்படுகிறது.

குறிப்பாக கருப்பையின் வளத்தை அதிகரிக்க, மாதுளை மாதவிடாய் காலங்களில் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

எது சிறந்தது?

மாதுளையை அப்படியே சாப்பிடுலாமா? அல்லது ஜுஸாக தயாரித்து குடிக்கலாமா? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால், எந்த ஒரு பழத்தையும் ஜுஸாக சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது தான் சரியான முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்போது தான் அவற்றின் முழு சத்தும் நமது உடலுக்கு நேரடியாக கிடைக்குமாம்.

சிறந்த நேரம்..?

பொதுவாக பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், பழங்களை இரவில் சாப்பிடுவதை விட காலை நேரத்தில் சாப்பிடுவதே சிறந்தது.

அப்போது தான் அதன் பயன்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். மேலும், பழங்களை அரிந்த சில நிமிடங்களிலே சாப்பிட வேண்டும். இல்லையேல் அதன் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்.

%d bloggers like this: