Advertisements

மதியம் குட்டி தூக்கம் நல்லதா

* கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். முடிந்தளவு காலை, மாலையில் வெளி வேலைகளை வைத்து கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்திற்காக வெளியில் செல்ல நேரிட்டால் குடையை உபயோகித்தல் நலன் பயக்கும்.

* கோடையில் கோபம் வருமா?

இரவில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் துாங்க வேண்டும். கோடையில் வெயில் அதிகளவு இருப்பதால் மனஅழுத்தம் அதிகமாகும். எனவே முடிந்தளவு கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனால் வரும் ஆபத்துக்கள் அதிகம்.
* மதியம் குட்டி துாக்கம் போடலாமா?
மதிய உணவு உண்ட பின் 20 முதல் 30 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுப்பது மிகவும் நல்லது. அதேநேரம் உறங்கி விடக்கூடாது.
* தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்?
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையாக வெளியேறும். எனவே நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது. மோர், இளநீர் பருகலாம். தர்ப்பூசணிப்பழம் எடுத்து கொள்ளலாம்.
* வெப்பம் தணிய வீட்டின் மாடியில் தண்ணீர் தெளிக்கலாமா?
தாராளமாக வீட்டின் மாடியில் தண்ணீர் தெளிக்கலாம். வீட்டின் வாசலிலும் தண்ணீர் தெளிப்பது நல்லது.
* கோடைக்கு ஏற்ற உணவை தேர்வு செய்வது எப்படி?
வெள்ளரிப்பிஞ்சு, பனை நுங்கு, எலுமிச்சை பழம் ஜூஸ், தர்ப்பூசணிப்பழம் எடுத்து கொள்வது நல்லது. காரமான, உப்பு அதிகம் உள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* கோடைக்கு ஏற்ற ஆடை எது?
கோடையில் பருத்தி ஆடைகளை மட்டுமே உடுத்தி கொள்ள வேண்டும். மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவது நலம் பயக்கும்.
* கோடையில் கிளம்பும் வெப்ப கட்டிகளால் ஆபத்தா?
அதிகம் வியர்ப்பவர்களுக்கு அக்கிகள் வெளிப்படும். அக்குல்களில் பூஞ்சான் பரவலாம். எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும் பவுடர்களை உபயோகிக்கலாம். கால்களிலும் அதை பயன்படுத்தலாம்.
– டாக்டர் ஜெபசிங்
புற்றுநோய் சிறப்பு மருத்துவ நிபுணர், மதுரை.

Advertisements
%d bloggers like this: