தைராய்டு டயட்!

தைராய்டு கோளாறினால், உடல் பருமனானவர்கள், 10 நாட்களுக்கு, இந்த ‘டயட்’டைப் பின்பற்றிப் பாருங்கள். பலன் தெரியும்.
காலை எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரில், அரை மூடி எலுமிச்சை சாறில், ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.
அரை மணி நேரம், சீரான நடைப்பயிற்சி அல்லது யோகா பயிற்சிக்குப் பின், காலை உணவு சாப்பிடலாம்.

வாழைப்பழம், மாதுளை அல்லது அந்தந்த பருவத்தில் கிடைக்கும், ஏதாவது இரண்டு பழங்கள் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், தைராய்டு சுரப்பியை சீராக இயங்கச் செய்யும்.
மதிய உணவிற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன், ஒரு கப் தயிரில், முருங்கை இலை அல்லது கொத்தமல்லி இலை, புதினா, மாதுளை முத்துக்கள் என, விருப்பமானதைப் கலந்து சாப்பிடலாம். உப்பு, சர்க்கரை சேர்க்கக் கூடாது.
மதிய உணவிற்கு, கோதுமை ரொட்டி, தயிருடன், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை என, ஏதோ ஒரு பச்சைச் சட்னியுடன் சாப்பிடலாம். மாலை நேரத்தில், கிரீன் அல்லது எலுமிச்சை டீயுடன், உலர் கொட்டைகள், ஒரு கைப்பிடி அளவு சாப்பிடலாம். வேர்க்கடலையை இத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். ஒன்றிரண்டு பேரீச்சை சேர்க்கலாம்.
இரவு உணவை, 7:00 மணிக்கு சாப்பிட்டு விட வேண்டும். சிவப்பு அரிசி, அவல் ஒரு கப் அளவு நீரில் நனைத்து, கால் கப் வறுத்த வேர்க்கடலை, இரண்டு, மூன்று காய்கறிகள் சேர்த்து, உப்புமா செய்து சாப்பிடலாம்.
நிஷா ஹோமி, ஹோம் மேக்கர், கேரளா.

%d bloggers like this: